சாதனை பெண்மணி விருது பெறப்போகும் ஆர்ய வைஸ்ய பெண்மணி

3429

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இஷ்வாகு கோத்திரத்தை சேர்ந்தவர் திருமதி. சுகன்யாலட்சுமி இராம்மோகன் அவர்கள், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். இவர் வேலூர் தங்க கோவிலில் நடக்க இருக்கின்ற பாலாறு பெருவிழா, மாத்ரு சக்தி 2022 என்ற பெண் துறவியர் மற்றும் மகளிர் மாநாட்டில் சாதனை பெண்மணி என்ற விருது பெற இருக்கிறார்.

இவரின் சாதனைகளாவன

பென்னாகரம் நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஆலய சன்னதிகளை பல்வேறு மக்களின் உதவியுடன் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

கிராமங்கள் தோறும் விளக்கு பூஜை என்ற திட்டத்தில் இணைந்து பென்னாகரம் நகரத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி இந்து மத ஆன்மீக விழிப்புணர்வை கிராமத்து பெண்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் வீடுகள் தோறும் லலிதா சகஸ்ரநாமம் என்ற திட்டத்தில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார். இவரின் சேவையை பாராட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து இயக்கம் இவருக்கு பென்னாகரம் நகரில் பதவியை வழங்கியுள்ளது.

மேலும் வருடா வருடம் ஆஞ்சநேய பக்த ஆன்மீக இயக்கத்தினால் நடத்தப்படுகின்ற ஆஞ்சநேய சிலை பிரதிஷ்டைக்கு பல கோடி இராம நாமங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

இதுவரை 10 கோடிக்கும் மேல் இராமநாமங்களை சேகரித்து 4 ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பொறுப்புகள்

திருமதி.சுகன்யா லட்சுமி இராம்மோகன் அவர்கள் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் தருமபுரி மாவட்ட பொருளாளராக திறம்பட நம் ஆர்ய வைஸ்ய சமூக பணியை மேற்கொண்டு வருகிறார்.

பென்னாகரம் சிவா-விஷ்ணு சேவா அறக்கட்டளை தலைவராக உள்ளார். பென்னாகரம் நகர விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொறுப்பாளராக உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் பென்னாகரம் ஒன்றிய துணை தலைவியாக உள்ளார். விரைவில் தருமபுரி மாவட்ட மகளிரணி நிர்வாகிகளில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இவர் இன்னும் பல சமூக மற்றும் சமய பணிகளை செய்து நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல வாசவி அன்னையை வேண்டி வாழ்த்துவோம்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group