Heroes of Aryavysyas – Mrs. பிரவீணா அருண்

2878

பலிசெட்ல கோத்திரத்தை சேர்ந்த பென்னாகரம் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் கடந்த பதினெட்டு வருடங்களாக பல பிரபல இதழ்களில் தனது சிந்தனைகளை தொடர்ச்சியாக கட்டுரைகளின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், ஆன்மீக தொடர்கள் ஆகிய தலைப்புகளில் நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரபல இதழ்களான மங்கையர் மலர், தீபம், ஶ்ரீ ப்ரம்மம் மற்றும் பல இதழ்கள் திருமதி. பிரவீணா அவர்களுக்கு சிறந்த எழுத்தாளர் எனும் விருதினை அளித்து கவுரவித்துள்ளார்கள்.

சமூக செயற்பாடளரான திருமதி. பிரவீணா அவர்கள் உலக ஆர்யவைஸ்ய மகிளாவிபாக் WAM தமிழ்நாடு, கன்யகாராகாலயா இசைக்குழு, திருப்பதி தாச சாகித்யா ஸ்ரீ ஹரிமண்டலி ஆகிய அமைப்புகளில் பெரும் பொறுப்புகளை ஏற்று மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

மேலும் – ஸ்வர்ண மகிளா விருது, வைஸ்ய ஆன்மிக ரத்னா விருது, வைஸ்ய சாதனையாளர் விருது, கின்னஸ் சாதனை, வ. உ. சிதம்பரனார் விருது, VSG-ICON விருது, National Pride of Woman விருது ஆகிய பல விருதுகளின் சொந்தக்காரராக திகழ்கிறார்.

கவிதாயினியாக, எழுத்தாளராக, நிருபராக, பாடகியாக, சமூக சேவகியாக, ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வரும் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் சமீபத்தில் World Aryavysya Mahasabha Mahila Vibhaag (WAM) – தமிழ்நாடு அங்கத்தின் மாநில தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் பணி சிறக்க VYSDOM குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT