வைஸ்ய சங்கமம் – VSG ICON 2022 சர்வதேச மாநாடு

3380

ஏழு வருடங்களுக்கு முன் மதுக்கூர் திரு. P. நந்தகுமார் அவர்கள் வைஸ்ய சங்கமம் என்கிற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவினை துவக்கினார்.

இப்பொழுது, வைஸ்ய குலத்தை சார்ந்த பல்துறை வல்லுநர்கள் சங்கமிக்கும் இடமாக வைஸ்ய சங்கமம் வாட்ஸ் ஆப் குழு திகழ்கிறது. இக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல இன்றியமையாத சேவைகளை செய்து கொண்டே இருக்கின்றனர்.

பல சாதனைகளை படைத்த வைஸ்ய சங்கமம் குழுவின் VSG – ICON 2022 சர்வதேச மாநாடு புதுச்சேரி Ocean Spray ரிசார்ட்டில் கடந்த மார்ச் மாதம் கோலாகலமாக நடந்தேறியது.

இந்த மாநாட்டில் மதுக்கூர் திரு. நந்தகுமார் அவர்கள் வரவேற்புரையை நல்கினார். பின்னர், வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் தலைவர் சின்னசேலம் முனைவர் A. அரவிந்தன் அவர்கள் துவக்கவுரையை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக திரு. கஸ்தூரிரங்கன் அவர்கள் – முன்னாள் AVMS தலைவர், வாசவி கிளப் V503A மாவட்ட ஆளுநர் திரு. சதீஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழு உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுக்கு VSG – கர்ணா விருது, VSG – துரோணா விருது, VSG – சப்போர்ட்டர் விருது, VSG – பெண் சாதனையாளர் விருது என விருதுகள் வழங்கப்பட்டது.

மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்திய விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. நந்தகுமார் அவர்கள், திரு. பிரகாஷ் அவர்கள், திரு. பாலமுருகன் அவர்கள், திரு. ஹரிராம் பிரசாத் அவர்கள், திரு. பிரதாபன் அவர்கள், திரு. ராமதாஸ் அவர்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட்.

வைஸ்ய சங்கமம் குடும்பத்தினர் குதுகலமாக சங்கமித்து அகமகிழ்ந்து மனம் நிறைய மகிழ்ச்சியுடனும், கை நிறைய நினைவு பரிசுகளுடனும் நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றனர்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT