தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.

போட்டி நாள் : 10/09/2021, வெள்ளிக்கிழமை

புகைப்படங்களை பதிவேற்ற கடைசிநாள்: 11/09/2021, சனிக்கிழமை, மாலை 6 மணிவரை.

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மகிளா விபாக் இணைந்து நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மண்டல அளவில் கொண்டாடப்பட உள்ளது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கேற்ப இந்தப் போட்டியானது ஆன்லைனில் நடைபெற இருப்பதால் உங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தியன்று நீங்கள் அலங்கரித்த விநாயகர் அல்லது உங்கள் படைப்பாற்றல் (Creativity) / கற்பனை திறனைக் கொண்டு உருவாக்கிய விநாயகரை புகைப்படம் எடுத்து நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படங்கள்:விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் அல்லது

உங்கள் படைப்பாற்றலால் (creativity) நீங்கள் உருவாக்கிய விநாயகர் / புகைப்படம் (Statue or Painting).

மூலிகைப் பொருட்கள், கைவினை பொருட்கள், சமையல் பொருட்கள், அரிசிமாவு, மஞ்சள் என எந்த முறையிலும் விநாயகர் உருவம் செய்திருக்கலாம்.

ஆனால் விநாயகர் உங்கள் சொந்த படைப்பாக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

உங்கள் படைப்பு தொடங்குவதற்கு முன் மூலப்பொருட்கள் வைத்து ஒரு புகைப்படம், படைப்பு முடிந்தவுடன் அந்த படைப்புடன் ஒரு புகைப்படம், நீங்கள் உருவாக்கிய அந்த விநாயகருக்கு/ புகைப்படத்திற்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி ஒரு புகைப்படம் என மூன்று புகைப்படங்கள்.

நீங்கள் உருவாக்கும் படைப்பு ஏதோ கருத்தை வலியுறுத்துவதாக அல்லது புராண நிகழ்வுகளை விளக்குவதாக இருந்தால் மதிப்பெண்கள் அதிகம் அளிக்கப்படும்.

குறிப்பு:

இந்தப் போட்டியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆர்ய வைஸ்யர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

10 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6மணி வரை மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

மண்டல நிர்வாகத்தால் தேர்ந்தேடுக்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து, உங்கள் விவரங்களையும், போட்டிக்கான புகைப்படங்களையும் பதிவிடவும்: https://jaivasavi.vysyaclick.com/

பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் உங்களின் விவரங்களையும், நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பிய புகைப்படங்களையும், கீழே குறிப்பிட்டுள்ள உங்கள் மாவட்ட பிரதிநிதிக்கு அனுப்பலாம். உங்களின் சார்பாக அவர்கள் பதிவேற்றம் செய்வார்கள் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு, இந்தப் போட்டிக்கான மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

மண்டல பொறுப்பாளர்கள்:
திரு. பிரவீன் குமார்
செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி தலைவர்
+91 99946 12763

திருமதி. சர்மிளா சேகர்
செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மகிளா விபாக்
+91 93846 12980

சென்னை மாவட்டம்:
திரு.பாலா வெங்கட்ராமன்,
மண்டல நிர்வாகி,
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்.
+91 97910 90417

செங்கல்பட்டு மாவட்டம் :
திரு. தீபக்
செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி PRO
+91 98948 32633

காஞ்சிபுரம் மாவட்டம்:
திரு.வெங்கடரமணா
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்,
+91 99522 08734

திருவள்ளூர் மாவட்டம்:
திரு. சதீஷ்குமார்
திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர்.
+91 78710 00802

வலைதள வடிவமைப்பு
திரு.இராஜ்குமார்,
கம்பைநல்லூர்.
தருமபுரி மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group