ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

2211

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் – சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.

இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

சொல்லப் போனால் ஆர்ய வைஸ்யர்கள் பூர்வ குடிகள் அனைத்தும் குரு பரம்பரை தொட்டு வந்தவை, எனவே அவர்கள் தங்களின் குருக்களை இந்த நாளில் வழிபடுவது இன்றியமையாதது…

நம் ஆர்ய வைஸ்யர்களின் ஒவ்வொரு கோத்திரமும் ஒவ்வொரு ரிஷியிடம் இருந்து வந்தவை, அவர் அந்த கோத்திரர்கள் அனைவருக்கும் பொதுவான குரு ஆவார்.

நாம் கடைபிடிக்கும் ஆச்சாரம் அனுஷ்டானம் அனைத்தும் வீட்டிற்கு வீட்டிற்கு மாறுபடுகிறதே எதனால்!!? அவர்களின் குருக்களின் ஆச்சார அனுஷ்டானங்களை அவர்கள் கடைபிடித்தது.

இவ்வாறு தலைமுறை தலைமுறையாக குருவின் பல செயல்களை சாதித்து வந்த நாம் இடைகாலத்தில் அந்த குரு வணக்கத்தை மறந்து விட்டோம்??

கெந்தசீல கோத்திரம்

உதாரணமாக கெந்தசீல கோத்திரம் எனப்படும் கந்த சீல, கிரந்தசில, கெந்தசீலகுல ஆகிய அனைவரும் கௌதமஸ கோத்திரத்தார் ஆவர். அவர்கள் வணங்க வேண்டிய குரு கௌதம மகரிஷி. இந்த நாளில் குரு கௌதமரின் படத்தை வைத்து வணங்கி, அவர் படம் இல்லை என்றால் அவரை நினைத்து உங்கள் குலதெய்வ படத்திற்கு தூப தீப ஆராதனை செய்து, அவரின் வாழ்க்கை வரலாறுகளை படித்து உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் தலைமுறை குழந்தைகள் ஞானத்தின் பிறப்பிடமாக விளங்கும் எனபது சத்தியம்.

ஏனெனில் கோத்திர குருவின் மூலமாக மட்டுமே மூதாதையர்களுடைய ஆன்மா தெய்வத்திடம் செல்ல முடியும். அவரே அந்த கோத்திர சந்ததியில் பிறந்த அனைவருக்கும் அர்த்த, ஞான, முக்தி மார்க்கத்தை போதிக்கும் / காட்டும் வாழிகாட்டி.

வருகின்ற ஆடி மாத முதல் பௌர்ணமியில் நம் கோத்திர குருவை வணங்கி நன்மை பெறுவோம்.

கிரந்த சில, கெந்தசில, கந்தசில கோத்திரத்தார் வணங்க வேண்டிய ரிஷிகா அகலிகை உடனுறை கௌதம மகரிஷி.
வரத முனி எனப்படும் பலிசெட்ல குலம், பரத்வாஜஸ கோத்திரத்தார் வணங்க வேண்டிய பலிசெட்ல கோத்திரத்தாரின் குரு பரத்வாஜர்
அபிமுஞ்சி குல, அபிமன்யு குல, அபிமஞ்சிகுல ஆகிய யக்ஞவல்கியஸ கோத்திரத்தார் வணங்க வேண்டிய குரு யக்ஞவல்கியர்.
தனகுல, தனந்தகுல, தானுகுல, தனகுண்டகுல ஆகிய வியாசஸ கோத்திரத்தை சேர்ந்த வைசியர்கள் வணங்க வேண்டிய குரு வியாஸர்.
அனந்தகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய கலைக்கோட்டு முனிவர் என அழைக்கப்படும் ரிஷ்யஸ்ருங்கர் முனிவர்.
நாபிள்ளகுல, முனகல்ல, மூலகுல ஆகிய குலங்களை சேர்ந்த மௌத்கல்ய மகரிஷி.
படகசீலகுல, பிராணசீலகுல, காமதேனுகுல, பாம்பால குல, ஓரணசீலகுல, பாபால, கமட்டகுல, பாஞ்சால குல, பாவள்ள, பிரக்பால ஆகிய அனைத்தும் குலங்களும் ஒன்றிணைந்தது தான் பாராசரஸ கோத்திரத்தின் குரு பராசர மகரிஷி.
அனுபகுல, அனபாலகுல, அப்பாலகுல ஆகிய குலங்களை சேர்ந்த அகத்தியஸ கோத்திரத்தின் குரு ரிஷிகா லோபமுத்திரா சமேத அகத்திய மகரிஷி.
புனகசில, கோசீல, உத்தமகோசீல, பட்டுகோசீல, பல்லவகோசீல, ஸ்ரீகோசீல, பீமகோசீல, நந்திகோசீல, சத்தியகோசீல, ஸ்ரீபும்சகுல என அனைத்தும் ஒன்றிணைந்த புலஸ்திய கோத்திரத்தின் குரு புலஸ்திய மகரிஷி.
மோர்குல, மோருகுல கோத்திரங்களின் குரு மார்கண்டேய மகரிஷி.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group