Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

1805

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய பெண் தான் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்று வணங்கப்படுகிறார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி நதி கரையில் வைஸ்ய மக்களின் குலதெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வாசவி அன்னையின் அவதார தினம் இன்று.

அன்னை சக்தி தேவி சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை உருவானது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பெனுகொண்டா நகரத்தில் குசுமஸ்ரேஷ்டி – குசுமாம்பிகை தம்பதிகளுக்கு தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி.

குசுமாம்பிகா என்பது அன்னையின் இயற்பெயர். அழகிய மங்கையாக வளர்ந்த அன்னையைக் கண்டு ஆசைப்பட்டான் விஷ்ணுவர்த்தனர் என்ற அண்டை நாட்டு அரசன். தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும் மிரட்டினான். ஊரே கூடி அன்னை வாசவி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற நிலையில் ஊரையும், தனது இனத்தையும் காக்க ஸ்ரீ வாசவி தீயில் பாய்ந்தார்.

அக்னி பிரவேசத்திற்கு பின் ஶ்ரீ வாசவி, அன்னை ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக விஸ்வரூப தரிசனம் வழங்கிய காட்சி

ஶ்ரீ வாசவி தேவியுடன் 102 கோத்திரத்திற்கும் தலா ஒரு தம்பதி வீதம் 204 நபர்கள் அக்னி பிரவேசம் செய்தனர். அக்னி பிரவேசத்திற்கு பின் ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக காட்சியளித்து விஸ்வரூப தரிசனத்தை வழங்கினார். தியாகத்தின் அடையாளமான, வைஸ்யர்களின் குல தெய்வமான ஶ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை இந்த நாளில் வணங்கி அருள்பெறுவோம்.

ஜெய் வாசவி 🙏

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group