ஆர்ய வைஸ்யர்கள் பல துறைகளில் வல்லுனர்களாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் புதுவையைச் சேர்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவர் கல்வெட்டுக்களை ஆராயும் வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் செய்த வியத்தகு சாதனைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
புதுவை மாநிலம் வில்லியனூரில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சீ. நடராசன் செட்டியார் மற்றும் சுப்புலட்சுமி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்.
தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் செய்த சாதனைகளின் ஒரு தொகுப்பு:
- “வரலாற்றில் மதகடிப்பட்டு” என்ற நூலினிற்காக புதுவை அரசு தொல்காப்பியர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
- புதுவை அரசு அதனின் உயரிய விருதான “கலைமாமணி” விருதினை 2008 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.
- வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் எழுதிய “கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி” என்னும் நூலுக்கு காரைக்காலில் உள்ள திரு. கணபதி சுப்பிரமணியம் என்ற தணிக்கையாளர் தலைமையில் இயங்கும் பாரதியார் கழகம் “கல்வெட்டுக் கலைமணி” என்று பட்டமளித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.
- தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராக பணியாற்றுகிறார்.
- புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகிறார்.
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
- தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்துயிருக்கிறார்.
- பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.
- இவர் பல இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதுடன் புதுவை வானொலியில் வரலாற்றுச் செய்திகள் குறித்த பல உரைகளையும் ஆற்றியுள்ளார்.
- இவர் தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 தொடர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளார்.
- சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்து உரையாடலில் பங்காற்றியுள்ளார்.
- புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்றுப் புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் என்கிற நூலையும் வெளியிட்டுள்ளார்கள்.
View an interesting and inspiring video about our Villianur Puzhavar
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
Kannikadhanam.com – Aryavysya Matrimony Website