ஆட்டோமொபைல் துறையில் அசத்திய வைஸ்ய மாணவர்

3159

எல்லோரும் கல்வி கற்கிறோம், கற்ற கல்விக்கெற்ற பணியில் அமர்கிறார். ஒரு சிலர் மட்டுமே கல்வியை ஆர்வத்துடன் பயிலும்போதே சில சாதனைகளை பயில்கின்றனர். அவ்வாறு தன் துறையில் ஆர்வத்துடன் சாதனை படைத்தவர் தான் நம் வைசிய சமூகத்தை சேர்ந்த திரு. பிரணவ், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவரின் தாய் திருமதி. மகாலட்சுமி மற்றும் தந்தை திரு. இரவி. இவர் பலிசெட்ல குலம், பரத்வாஜஸ கோத்திரத்தை சேர்ந்தவர்.

தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் Automobile Engineering படித்து வருகிறார். SAE வருடந்தோறும் Baja SAE எனும் தலைப்பில் போட்டியை நடத்துகிறது.

SAE என்பது Society of Automobile Engineers, அதாவது வெவ்வேறு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த வல்லுனர்களின் இயக்கம். இந்த இயக்கம் வருடம் தோறும் உலகம் முழுவதும் உள்ள வளரும் புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், கண்டறியவும் Baja SAE என்ற தலைப்பில் புதுவகை அம்சங்களை கொண்ட வாகனங்களுக்கான போட்டியை நடத்துகிறது. அதில் காணொளி தேர்வில் வெற்றிபெறும் இந்தியாவில் சிறந்த 100 கல்லூரி மாணவர்கள் அணி மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் புதுவிதமான வாகனங்களை உருவாக்கும்.

சென்ற 2019-ம் வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற காணொளி தேர்வில் இந்திய முழுவதும் பங்கேற்ற அணிகளில் முதல் 100 இடங்களில் தேர்வாகி, ஜனவரி 2020-ல் நடைபெற்ற Baja SAE போட்டியில் பங்கேற்ற பிரணவ் தலைமையிலான அணி புதுவித அம்சங்களை கொண்ட குறைந்த பொருட் செலவில் All Terrain Vehicle– உருவாக்கி, பங்கேற்ற 100 அணிகளில் Static எனும் முதல் பிரிவில் இந்தியாவிலேயே முதல் அணியாக தேர்வு செய்யப்பட்டது. Dynamic எனும் இரண்டாம் பிரிவில் இந்தியாவிலேயே நான்காம் அணியாகவும், தென் இந்தியாவில் முதல் அணியாக தேர்ந்தேடுக்கப்பட்டது. இதற்காக அணி தலைவராக பல மாத உழைப்பை பிரணவ் அவர்கள் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுடைய படைப்புகளை பற்றி பிரணவ் கூறுகையில்:

👉🏻 இந்த வாகனம் சாலை, மணல், மலைப்பாதை, நீர்நிலை வழுவழுப்பான பாதை என அனைத்து தடங்களில் செல்லுமாறு வடிவமைத்துள்ளோம்.

👉🏻 வாகனம் எரிபொருளில் இயங்காமல், பேட்டரி மூலமாக இயங்கும். மேலும் பேட்டரி நிலைகளை கண்காணிக்க Battery Manager ஒன்றை பயன்படுத்தி உள்ளோம். நம் மொபைலில் இருந்தே பேட்டரியை கண்காணிக்க முடியும்.

👉🏻 இதுவரை இன்ஜின்களில் மட்டுமே இன்ஜின் கூலர் இருக்கும், ஆனால் பேட்டரி மூலமாக இயங்கும் எங்கள் வாகனத்தில் பேட்டரி கூலர் பயன்படுத்தி உள்ளோம்.

👉🏻 பேட்டரி வெப்பநிலை அளக்க பொறுத்தப்பட்ட தெர்மாமீட்டரில் வெப்பநிலை உயர்வை தொட்டவுடன் ஆட்டோமெட்டிக் சென்சார் மூலம் பேட்டரியில் பொருத்தப்பட்ட பேட்டரிகூலர் தானாக இயங்கும்.

👉🏻 வண்டியின் நான்கு சக்கரங்களிலும் கார் போன்ற வாகனத்திற்கான டிஸ்க் பிரேக் பயன்படுத்தாமல்,
பைக்கின் ஹைட்ராலிக் டிஸ்க் ப்ரேக் மட்டுமே பயன்படுத்தி உள்ளோம்.

👉🏻 வாகன ஓட்டுனர் விபத்துகளின் போது வாகனம் தலைகுப்புற விழும்போதும், மலை பாதைகளில் விபத்துகளில் வாகனம் மேலிருந்து புறண்டு விழும்போதும், பாதுகாப்பாக இருக்க 5 pin safety Belt பயன்படுத்தியுள்ளோம்.

இதுபோல பல அம்சங்களை தன்னுடைய வாகனத்தில் பயன்படுத்தியுள்ளனர் பிரணவ் தலைமையிலான அணியினர்.

இது போன்ற வைசிய சாதனை இளைஞர்களை ஊக்குவிக்க நம் வைசிய சமூகம் முன்வர வேண்டும்.

உலகத்தின் தலைசிறந்த சொல் செயல்!

என்றும் அன்புடன்!
பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்,
ஆசிரியர் – ஆர்ய வைசியர் வரலாறு புத்தகம்
9710878517

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Matrimony Website for Aryavysyas

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group