சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை இப்பொழுது பார்ப்போம்.
Click here to Read the Previous Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs
கிரந்த மாலா தடை செய்யப்பட்டதும் வைஸ்யர்களுக்காகவே குப்த மாத பத்திரிகை என்று ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். அது 16 வருடங்கள் வெகு சிறப்பாக வெளிவந்தது. அப்போது மிகப் பிரபலமாக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் நம் நாட்டை விட்டு தலைமறைவாகி சிங்கப்பூரில் இந்தியன் நேஷனல் ஆர்மியை ஆரம்பித்த நேரம். அவரை ஆதரிக்க பலரும் தயங்கிய நேரத்தில் தைரியமாக அவரை ஆதரித்தும் அவரின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதியும் ஆந்திர மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார் குப்தாஜி.
ஆந்திராவில் பிறகு காங்கிரஸ் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றார். பிறகு வைஸ்யர்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ஹைதராபாத் விமோசன போராட்ட சமிதி என்று ஒன்றை ஆரம்பித்து வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார். அதனால் கைது செய்யப்பட்டு 39 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார். மேலும் பல தியாகங்கள் செய்த 2000 சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு அரிய புத்தகத்தை வெளியிட்டார்.
திடீரென அவருக்கு பொதுவுடமைக் கொள்கையின் மீது அவரின் கவனம் திரும்பியது. எனவே அந்தக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட கம்யூனிஸ்ட் பார்ட்டியில் 1946 ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தார். சுமார் 10 ஆண்டுகள் அந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். பல போராட்டங்களில் கலந்து கொண்டதால் இவர் பலமுறை கைது செய்யப்பட்டு ஐதராபாத், வாரங்கால், குல்பர்கா என பல மத்திய சிறைச்சாலைகளில் கைதியாக தன் வாழ்நாளில் பல வருடங்களைக் கழித்தார்.
இவர் நம் நாட்டில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பல சங்கங்களை தோற்றுவிக்க காரணமாக இருந்தார். ஆந்திராவில் சிதறியிருந்த வைஸ்யர்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் அவர்களை கலந்துகொள்ள செய்தது இவரின் மிகப் பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் வைஸ்ய இளைஞர்களை ஒன்று சேர்க்க 1939ல் அகில பாரதிய வைஸ்ய யுவஜன சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். பிறகு அகில இந்திய வைஸ்ய சமாஜ் ஒன்றையும் ஆரம்பித்தார். மேலும் ராஷ்ட்ரிய வைஸ்ய சமஸ்தால சமக்யா என்று ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.
மேலும் வைஸ்யா ஹாஸ்டலின் கௌரவ சூப்பிரண்டன்டாக 20 வருடங்கள் சேவை புரிந்தார்.
அதுமட்டுமல்லாமல் பீகாரில் வசித்துவந்த வைஸ்யர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட வைத்தார். பீகார் அகில இந்திய வைஸ்ய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தலைவராகவும் திகழ்ந்தார். இப்படி பல பொது சேவைகளில் ஈடுபட்டும், அகில இந்திய அளவில் வைஸ்யர்களை ஒன்றுபடுத்தியும், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட போராட்ட வீரர்களை புகழ்ந்தும் தன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதியும் சேவை புரிந்த இவருக்கு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு புதிய எண்ணம் ஏற்பட்டது, அது ஒரு வித்யாசமான சிந்தனை, அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
பண்ருட்டி சொ.முத்துக்குமார்
To be continued…
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
🎧 Subscribe Ekasvara to hear Powerful Mantra Series for a Powerful Life: www.youtube.com/channel/UCqzrwXCnJKnmMIwu2sQfV3Q