‘ஆயில் பாத்’ தும் தீபாவளியும் மருத்துவமும் | Dr. Bala Naga Lakshmi

2902

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நம்மூரில் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. உடல் சூடு, உடல் வலி, தசை வலி, சோர்வு போன்ற பல விஷயங்களுக்கு உடனடி நிவாரணி தான் இந்த எண்ணெய் குளியல். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் எண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்று வெந்நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மையானது.

எண்ணெய் குளியலின் Dos and Don’ts பற்றி வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi கூறுவதை கேட்போம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும், எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெய்யை ஒவ்வொரு காதிலும் மூன்று துளிகளும் ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும் விட்டு பின் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக தேய்க்கவும்.

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையில் 6.30 மணிக்குள் குளித்து முடித்து விடவேண்டும்.

எண்ணெய் குளியல் செய்த நாளில் செய்ய கூடாதவை

  • பகல் தூக்கம் கூடாது
  • வெயிலில் அலைய கூடாது
  • உடலுறவு கூடாது
  • அதிக உழைப்பு கூடாது
  • மாமிச உணவுகளை தவிர்க்கவும்

Happy Diwali! Healthy Diwali!!

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group