உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் எட்டாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
Click here to get the 7th Tip Shared by the Doctor for Healthy Living
Day 8 – பிணியணுகா விதி
பிணியணுகா விதி என்பது நோய் நம்மை நெருங்காமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர், அவை என்னவென்றால்:
- 6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்தையும், 4 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்தையும் உட்கொள்வோம்.
- ஒன்றரை மாதத்திற்கு ஒரு தரம் நசியம் செய்து கொள்வோம் (நசியம் எனும் பாரம்பரிய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை மூலம், நாசிகப்பாதை, சைனஸ்கள் சுத்தம் செய்யப்படும்).
- வாரத்திற்கு ஒரு முறை சவரம் (Shaving) செய்து கொள்வோம்.
- நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்னை விட்டு தலை முழுகுவோம்.
- மூன்று நாட்களுக்கு ஒரு தரம் கண்களுக்கு மை இட்டு கொள்வோம்.
- வாசனைப் பொருட்களையும், பூக்களையும் நடு இரவில் முகர மாட்டோம்.
- தினமும் இரண்டு முறை மலம், ஆறு தடவை சிறுநீர் கழிக்க வேண்டும்.
- இரவில் பசுவின் பாலையே பருகுவோம்.
- எண்ணெயிட்டு தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரிலேயே குளிப்போம்.
- இடது கையை கீழே வைத்து உறங்குவோம்.
- முன்னால் சமைத்த உணவு, அமுதெனினும் உண்ணமாட்டோம்.
- பெருந்தாகம் கொண்டாலும் உணவின் கடைசி அன்றி மற்ற காலங்களில் நீரை அருந்தமாட்டோம்.
- உண்டபின் சிறிது தூரம் குறுநடை கொள்வோம்.
- இரவில் விளக்கு, மனிதர், மரம் இவைகளின் நிழலில் தங்க மாட்டோம்.
இத்தகைய நியதிகளை கை கொண்ட இடத்தில் எமனுக்கு என்ன வேலை? என சித்தர் கூறுவர்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group