உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navaratri Utsav – 2019 இன் இரண்டாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக 2nd Tip for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
Click here to get the 1st Tip Shared by the Doctor for Healthy Living
Day 2 – Take Care of Your Teeth
பல் துலக்குதல்
பல் துலக்குவதற்கு துவர்ப்பு, கைப்பு அல்லது கார்ப்பு சுவை உள்ள அசோகு, வேம்பு, அத்தி, ஆல், இத்தி, எருக்கு, கடம்பு, கருங்காலி, குருக்கத்தி, செண்பகம், நாவல், நாயுருவி, மகிழ், மருது, மா அல்லது வேல் என ஏதேனும் ஒரு குச்சியைக் கொண்டு பல்துலக்குவது சிறப்பு.
பல் துலக்கும்போது இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக துலக்க வேண்டும். துலக்கிய பின் 12 முறை வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பற்கள் உறுதியாக இருக்கும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
பல் வலியை போக்க – Home Remedies
- கல் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்
- பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும்
- கொய்யா இலை கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளிக்கவும்
வாய்புண் தவிர்க்க, வராமல் தடுக்க
- ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள்
- லெமன் ஜூஸ் பருகுங்கள்
- இளநீர் பருகுங்கள்
- மாசிக்காய் பவுடர், மணத்தக்காளி, நெல்லிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
வாய் துர்நாற்றம் போக்கவும், வராமல் தடுக்கவும்
- காலை இரவு என இரண்டு முறை பல் துலக்க வேண்டும்
- நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியா, Fungi மற்றும் இறந்த செல்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும், எனவே பல் துலக்கியவுடன் நாக்கினை சுத்தம் செய்ய வேண்டும்
- கிராம்பு, வெந்தயம், சோம்பு, இலவங்கப்பட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு மெல்லவும். அதிலுள்ள ஆன்டிசெப்டிக் ப்ராப்பர்ட்டி வாய் துர்நாற்றத்தை போக்கும்
- ஒரு துண்டு எலுமிச்சை பழம் அல்லது ஆரஞ்சுப் பழத்தை வாயில் போட்டு மெல்லவும், அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் வாய் துர்நாற்றத்தை போக்கும்
Keep your Teeth Healthy! Keep your Smile Beautiful!!
எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம், எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்பதை பற்றிய பதிவுடன் விரைவில் சந்திப்போம்!
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group