உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navaratri Utsav – 2019 இல் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக 9 Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக நவராத்திரியின் 9 நாட்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

நம் அனைவருக்குமே நலமான வாழ்வுதான் விருப்பம் அல்லவா?

நம் வைஸ்ய Doctor கூறும் அறிவுரைகளை பற்றி சிந்தனை செய்யுங்கள்! உடல் நலத்தை பேணுங்கள்!!

#Day 1 – Waking up Early

சக்தியை வழிபடத் தகுந்த முக்கியமான ஒரு பண்டிகை நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது, நம் உடலில் ஒன்பது வாசல்கள் உள்ளது அதனை நவ வாசல்கள் என சித்தர்கள் அழைப்பர் அவை கண், காது, மூக்கு, வாய், கருவாய், எருவாய் என்பனவாகும்.

இந்த ஒன்பது வாசல்களையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் இதன் வழியாகவும் நோய்க்கிருமிகள் சென்று பற்பல நோயை மனிதருள் உண்டாக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் அன்றாடம் குளிக்கும் போது இந்த நவ வாசல்களையும் சுத்தம் செய்ய வேண்டும் இதுவும் ஒரு வகை ஒழுக்கம் என கூறுவர்.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – ஒழுக்கமே மேன்மையைத் தருவதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

சித்த மருத்துவத்திலும் ஒழுக்கத்தை நித்திய ஒழுக்கம், கால ஒழுக்கம் என கூறியுள்ளனர். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளே நித்திய ஒழுக்கமாகும், நாம் உடல் நலமும் – மன நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இந்த ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் சாலச்சிறந்தது.

உறக்கத்திலிருந்து எழுதல்!

நல்லுடலையுடையோன் நாள்தோறும் அதிகாலை நான்காவது சாமம் (4 முதல் 6 மணிக்குள்) அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை வணங்க வேண்டும்.

அப்படி வைகறையில் துயிலெழுபவர்கட்கு அறிவில் தெளிவை உணர்த்துகின்ற சுத்த நரம்பு என்னும் ஓர் வித நரம்பு தெளிவாய் வேலை செய்யும். வாதம் பித்தம் கபம் தத்தம் நிலையில் நிற்கும்.

ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் ஆவதில்லை! காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல 8 மணிக்கு எழுபவர்களே இங்கு அதிகம். குளிர்காலங்களில் காலையில் எழுவது கஷ்டமான விஷயம் தான். சரி அதிகாலையில் எழுந்து கொள்ள என்ன தான் செய்யலாம்? சின்ன சின்ன வழிமுறைகள் இங்கே கூறுகிறேன், முயற்சித்து பாருங்கள்!

  1. இரவு உறங்கப்போகும் போது உங்கள் ஆழ் மனதுக்குள்ளேயே இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று பல முறை சொல்லிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நமது பயாலஜிக்கல் கிளாக் என்னும் உடலியல் கடிகாரம் நம்மை ஆட்டோமேட்டிக்காக எழுப்பிவிடும்.
  2. குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழும்புவதை வழக்கமாக கொள்ளுங்கள் விடுமுறை நாட்களில் 10 மணி வரை உறங்கினால் வேலை நாட்களிலும் அதே நிலைமை தான் உண்டாகும்.
  3. சூரிய வெளிச்சம் படும் இடத்தில் உறங்குங்கள் சூரிய ஒளியே உங்களை எழுப்பிவிடும்.

#BeAnEarlyRiser

எழுந்தபின் செய்யும் கடமைகளை பற்றிய #2nd டிப்புடன் நாளை சந்திப்போம்! ஜெய் வாசவி!!

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group