ஆர்ய வைஸ்யர்களும் கோதாவரி நாகரிகமும் | ஆரிய வைசியர் வரலாறு – 06

4407

நம்மில் பலர் நாம் ஆரியர்கள் என்று கூறிக்கொள்கிறோம்! உண்மையில் நாம் ஆரியர்கள் இல்லை!!

ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் ஆரியர்கள் டி.என்.ஏ நம்மில் இருந்திருக்கும் அல்லவா?

திருமதி. மினி கரியப்பா நடத்திய இந்திய முழுவதுமான சாதிவாரிய டி.என்.ஏ சோதனையில் பாரதத்திற்கு வந்த குடியேறியகளான யூதர்கள் எனும் ஆரியர்களின் டி.என்.ஏ நம்மில் இல்லை என தெளிவான சான்று கிடைத்துள்ளது.

அப்படி என்றால் நாம் யார்? திராவிடர்களா?!

ஆம் என்கிறது வரலாறு.

திராவிடர் எனும் சொல் யூதர்கள் தன்னை தானே உயர்த்தியும் பாரத பூர்வீக குடிகளை இழித்து பேசவும் தரையில் வாழ்பவன் எனும் பொருள் கொள்ளும் வகையில்

தரை + இடன் = தரையிடன்

என்பது வடமொழியில் த்ராவிடன் எனப்பட்டு பின் திராவிடன் என மருவியது.

Read here: ஆரிய வைசியர் வரலாறு – ஆரிய வைசியர் ஆரியரா? திராவிடரா?? Part – 05

உண்மையில் திராவிடன் எனும் சொல் பாரதத்தின் வெவ்வேறு ஆற்று நாகரிகங்களின் கூட்டுத்தொகை ஆகும்.

இதில் கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை என பல நாகரிகங்களை கூறலாம்.

இதில் ஆரிய வைசியர்களான கோமுட்டிகளின் நாகரிகம் கோதாவரி நாகரிகம் ஆகும். பாரத நாகரிகத்துக்குள் நமது நாகரிகம் வருவதால் நம்மை திராவிடன் என கூறிக்கொள்ளலாம்.

சொல்லப்போனால் நமது நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை விட கோதாவரி நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்பதே மிகச்சிறந்த அடையாளம் எனலாம்.

பிராமண பட்டம்

நாம் ஆரியர்களா? திராவிடர்களா? என்றால் திராவிடர்கள் என்கிறது வரலாறு? திராவிடர் பாரத பூர்வீக குடிகளை குறிக்க பயன்படுத்தும் சொல். ஆரிய வைசியர்கள் பெரும்பான்மையோர் பிராமணர்கள்.

என்ன குழம்புகிறதா?

முதலில் ஆரியர்கள் வேறு பிராமணர்கள் வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக வந்தேறி ஆரியர்கள் பிராமண பட்டத்தை தட்டிப்பரித்தனர்? அப்படி என்ன பிராமண பட்டத்தில் இருக்கிறது? அதற்கான விடை இதோ!

பிராமண நிலை

உண்மையில் பிராமணர் என்பது சாதி பிரிவு இல்லை. அது ஒரு நிலை. பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் எனப்பட்டனர்.

அதாவது அன்றைய கால கட்டத்தில் 6 வயதில் குருகுல கல்வியில் இணையும் ஒருவர் 18 ஆண்டுகள் கடும் பயிற்சியில் ஆயகலைகள் 64 ஐயும் கற்று தெளிந்து ஞானத்தை அடைவாராகில், அவரை பிராமணன் என உலகம் கண்டது.

18 ஆண்டுகள்

18 ஆண்டுகளை கொண்ட குரு குல கல்வியானது 6 நிலைகளை கொண்டது. ஒவ்வொரு நிலையும் 3 ஆண்டுகளை கொண்டிருந்தது. 6 வயதில் தனது குருகுல கல்வியை தொடங்கும் ஒருவன் தொடக்க நிலையில் கருப்பு வண்ண ஆடையை அணிய வேண்டும்.

பின் 4 முதல் 6 ஆண்டுகள் வரை நீல நிற ஆடையையும், அடுத்த மூன்று ஆண்டுகள் பச்சை நிற ஆடையையும், பின் 9 முதல் 12 ஆண்டுகள் வரை சிவப்பு நிறத்தையும், கடைசி 3 ஆண்டுகள் தம் முழு மனமுதிர்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிறத்தையும் அணிந்தனர். குருகுல கல்வியை முடித்தவர் பிராமண நிலையை அதாவது ஞான நிலையை பெற்றவர் என்பதை காட்ட எப்போதும் வெள்ளை நிற ஆடையை உடுத்தினர்.

அவரையே இந்த உலகம் பின்பற்றியது. பிராமணன் எனும் சொல் சித்த புருஷர்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் குறித்தது.

இவ்வாறு பிராமண நிலையில் இருந்தவர்களை பாரத மக்கள் போற்றி வணங்கியதால் வந்தேறி ஆரியர்கள் பிராமண பட்டத்தை தட்டி பறித்தனர்!

புத்தரே யூத பிராமணர்களை பொய் பிராமணர்கள் என எள்ளி நகையாடியுள்ளார்.

வைசிய பிராமணர்கள்

அப்படி என்றால் வைசியர்கள் பிராமணர்களா? என்றால் ஆம் என்கிறது நம் புராண வரலாறு. வைசியர்கள் பிராமணர்கள் என்பதை விட, ஆரிய வைசியர்களில் பிராமண நிலை அடைந்தவர்கள் அதிகம் எனலாம். சான்றாக நம் 102 ஆரிய வைசிய கோத்திரத்தை வழிநடத்தும் குல குருக்களான வைசிய முனிவர்களை சொல்லலாம்.

ஆக நம்மில் பெரும்பான்மையோர் பிராமண நிலையில் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

ஜைனர்களான சமணருக்கும் ஆரிய வைசியர்க்கும் உள்ள தொடர்பு அடுத்த பதிவில்.

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp