ஜோதி பிண்டி இல்லாமல் நமக்கு நாக சதுர்த்தி பண்டிகை முழுமையடையாது. பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை கொண்டு ஜோதி பிண்டியை செய்து பழகியுள்ள நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித ஜோதி பிண்டியை பரிமாற இருக்கிறார்.
ராகி ஜோதி பிண்டி!
வாருங்கள் சத்தான, சுவையான ராகி ஜோதி பிண்டியை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
- ஈர பச்சை அரிசி மாவு 700 கிராம்
- ராகி மாவு 300கிராம்
- வெல்லம் 600 கிராம்
- ஏலக்காய் பவுடர் தேவையான அளவு
- எள் 1 டேபிள்ஸ்பூன்
- வெள்ளரி விதை 1 டேபிள்ஸ்பூன்
- பூசணி விதை 1 டேபிள்ஸ்பூன்
- தேங்காய் 1
- பெட்டுகடலை மாவு 150 கிராம்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ராகி மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். அதில் தேங்காய் வெள்ளரி விதை, பூசணி விதை ஏலக்காய், ஆகியவற்றைப் போட்டு பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- அடுப்பிலிருந்து இறக்கி மாவை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
- நன்றாக சூடு ஆறிய பிறகு வேண்டிய வடிவத்தில், அளவில், ராகி ஜோதி மாவை செய்து கொள்ளலாம்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here to Know – நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி