ராகி – தேங்காய் – மாங்காய் சுண்டல் | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

4577

பண்டிகை கால ஸ்பெஷல்களில் சுண்டல் வகைகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பலவகையான சுண்டல்களை நாம் சமைத்து சுவைத்திருந்தாலும்; ஒரு இன்னொவேட்டிவான சுண்டல் வகையை நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் நமக்கு பரிமாற இருக்கிறார்.

வாருங்கள் சத்தான, சுவையான ராகி – தேங்காய் – மாங்காய் சுண்டலை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு அரை கப்
  • துருவிய தேங்காய் கால் கப்
  • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • தாளிக்க கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு
  • துருவிய மாங்காய் கால் கப்
  • பெரும்காயம் ஒரு சிட்டிகை

செய்முறை:

PROCESS:

ஒரு கப் தண்ணீர் ஊற்றி – உப்பு சேர்த்து – கொதி வந்த பிறகு ராகி மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். பிறகு மூடி போட்டு 15 நிமிடம் வைக்க வேண்டும்; பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் போட்டு, அதனுடன், தேங்காய் மாங்காவையும் சேர்த்து உருட்டி வைத்த சுண்டலையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவையான, சத்தான சுண்டல் தயார்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Know about our Chef!

Our Chef’s recipe has got featured in an International Magazine – Food & Health.