கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்

14856

கௌரம்ம பண்டக – நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம்.

கௌரியை நம் வீட்டில் வைத்து வழிபடுவதால் இயற்கையாகவே பாசிடிவ் வைப்ரேஷன் நம்முள் நிறைந்து இருக்கும்.

அப்பேர்பட்ட சக்தி வாய்ந்த கௌரியை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைஸ்ய குல பெண்களுக்கு வடிவமைக்க பயிற்சியளித்துள்ளார் கோவையை சேர்ந்த திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்! அதுவும் இலவசமாக!!

திருமதி. லக்ஷ்மிப்ரியா அவர்களின் தெய்வீகம் நிறைந்த கைவண்ணங்கள் சில உங்கள் பார்வைக்கு:

நம் Vysdom.in குடும்பத்தினருக்காக; திருமதி. லக்ஷ்மிப்ரியா தரும் சில SMART TIPS:

  • கௌரி செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தி செய்ய வேண்டும்
  • மஞ்சள் தூள் தரமானதாக இருப்பது அவசியம். முடிந்தால் அரவை மில்லில் அரைத்து விற்கும் மஞ்சளில் செய்தால் நன்றாக இருக்கும்.
  • அந்த மஞ்சள் தூளையும் நன்றாக சலித்து கொண்டால் கௌரி வழுவழுப்பாக செய்ய வரும்.
  • மஞ்சள் தூளில் சிறிது எலுமிச்சை சாறு (வடிகட்டியது) கலந்து செய்யும் போது கலர் ப்ரைட்டாக இருக்கும்.
  • மஞ்சளை மிருதுவாக பிசைந்து செய்ய வேண்டும்.
  • கைகளை அடிக்கடி நீரில் கழுவி துணியில் துடைத்து பின் கௌரி செய்யும் போது நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து மஞ்சள் தூள் விரைவில் நிறம் மாறாமல் இருக்கும்.
  • மஞ்சளில் கௌரி செய்து வழிபடுவது மட்டுமே சிறந்தது.

அனைவருக்கும் கௌரியின் அருள் கிடைக்கட்டும். ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Kovai Mrs. Lakshmi Priya and Family

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

2 COMMENTS

  1. அம்மா வாசவி அருள் ஆசி கிடைக்கம் கெளரஅம்மா அருள்ஆசி தா இவர்கள் குடும்பத்திற்க்கு