ஆரிய வைசியர் ஆரியரா? திராவிடரா?? | ஆரிய வைசியர் வரலாறு – 05

6685

ஆரிய வைசியர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும் என்றால் முதலில் ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? என்பதை அறிய வேண்டும்!

யூதர்கள்:

இப்போதைய ஐரோப்பிய நாடுதான் யூதர்களின் தேசம், யூதர்களில் இரு பிரிவினர் உண்டு..

யூதர்கள், யூத பிராமணர்கள் – இவர்களும் யூதர்களே இவர்கள் இந்தியாவில் குடியேறி உயர்ந்த பிரிவான பிராமணர்கள் என்று பின்னாளில் தனக்கு தானே அறிவித்துக் கொண்டனர்.

இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவினர் தனது மேய்ச்சல் தொழிலை தொடர்ந்து நடத்தி வர நல்ல ஒரு செழிப்பான தேசம் நோக்கிவந்தனர் அப்படி அவர்கள் மத்திய ஆசியா, கைபர் கணவாய் வழியாக வந்த தேசம் தான் நம் நாடு, இப்படிதான் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

அவர்களின் வெள்ளை நிறத்தின் காரணமாகவும், வந்தாரை உபசரிக்கும் நமது கலச்சாரத்தையும் தவறாக பயன்படுத்தி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இங்கிருந்த மக்களின் வாழ்வுரிமைகளை பறித்தனர்.

Read here: ஆரிய வைசியர் வரலாறு – நாம் யார்? Part – 04

திராவிடம்

யூதர்கள் தங்களை எப்போதும் உயர்வாக எண்ணிக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்கள் (உண்மையில் வேஸ்ட் பீஸுங்க); தங்களை கடவுளின் தூதுவர்கள் என்று சொல்லி கொண்டனர்.

அவர்கள் பெரிய இடத்தில் இருக்கும் மக்கள் எனவும், இந்திய பூர்வ குடிகளை தாழ்ந்தவர்கள் என கருத்தில் கொள்ளும்படி இந்திய மக்களை திராவிடன் என அழைத்தனர்.

திராவிடன் – என்பதை பிரித்து பார்த்தால்
தரை + இடன் என பிரிக்கலாம். இதை இணைத்தால் தரைவிடன் என அழைக்கலாம்.

ஆரியமொழிகளில் – ரி ழ ஆகிய சொற்களை சொல்ல முடியாது. எனவே தரைவிடன் என்பதை த்ராவிட என அழைத்தனர்.

தரை = த்ரா ஆனது. மேலும் சான்றுக்கு தமிழில் திரி என்றால் மூன்று என்று பொருள் உண்டு. உதாரணமாக திரிகடுகம் என்ற நூலே உண்டு.

திரி என்பது காரணப்பெயர் ஆகும், அக்காலத்தில் விளக்கில் இடும் திரியை மூன்று நூல்கள் சேர்த்து திரித்து விளக்கிடுவர். எனவே மூன்று எண்ணிக்கையை கூற திரி என்றனர் இதனை அவர்களுக்கே உரிய வார்த்தையான த்ரி என்றனர்;

  • த்ரிசூலம்
  • த்ரிநேத்ரம்

எனும் வடமொழி சொற்கள் இப்படி பிறந்தது தான். ஆக தரையில் வாழ்பவன் எனும் பொருளில் திராவிடன் என இந்திய பூர்வீக குடிகளை அழைத்தனர்.

இவனுங்க மேல வானத்துல இருந்து வந்தவங்களாம்…🤣

இந்து கோமுட்டிகள்

கவரா எனும் இந்து கோமுட்டிகளே, கோமுட்டி சமூகத்தின், பூர்வீக கலாச்சாரம்.

இந்த ஆரிய வைசியர்களே ஷெட்டி, செட்டி, செட்டியார், குப்தா எனவும் அடைமொழி இட்டு தென்னிந்தியா மற்றும் பல்வேறு இந்திய மாநிலங்களில் அழைக்கப்படுகிறார்கள்

கோமுட்டி செட்டியார்

தமிழ்நாட்டை பொறுத்தவரை செட்டியார் எனும் சொல் வாணிபம் செய்யும் சமூகத்தை குறிப்பதால் மேலும் செட்டியார்கள் சமூகம் அதிகமாக உள்ளதால், உதாரணமாக

  • நாட்டுக் கோட்டை செட்டியார்கள்,
  • கொங்கு செட்டியார்கள்,
  • 24 மனை செட்டியார்கள், என பலர் உள்ளனர்.

இவர்களில் இருந்து ஆரிய வைசியர்களை தனித்து காட்ட,
கோதவரி நதிக்கரையை சேர்ந்த செட்டியார்கள் என்பதன் சுருக்கமாக கோமுட்டி செட்டியார்கள் என மரியாதையாக அழைத்து வந்தனர்.

இந்த மரியாதை காலப்போக்கில் கிண்டல் சொல்லாக மாறிப்போனது. எது எப்படி இருந்தாலும் நாம் அனைவரும் கோதவரி நதிக்கரை நாகரிகத்தில் தோன்றியவர்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

கோதாவரி நாகரிகம் அடுத்த பதிவில்…

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp