கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02

7146

கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?
வாருங்கள் விளக்கமாக காண்போம்.

முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரிய வைசியர் குலத்தை பெரும் குலப்பிரிவாக கொண்டால்,
போதயனர் உருவாக்கிய போதாயனச கோத்திரம் எனது கோத்திரப்பிரிவு, இந்த கோத்திரத்தில் புதனகுல, புத்திகுல, புதகுல ஆகியன சிறுகுல பிரிவுகள் எனவும், ரிஷிகுலம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய வைசியர்களைப் பொறுத்தவரை இந்த சிறுகுலப் பிரிவுகளை ரிஷிகுலம் என்பதே சாலச் சிறந்தது.

பிரவரம்

ப்ரவரான் என்று வடமொழியில் அழைக்கப்படும் பிரவரம் என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பிரவரான் என்பது வேத பாராயண முறையை, அந்த வேத பகுதியை எழுதிய முனிவர் பெயரையும், சைவ ஆகம பூசனை முறை ஆகிய விவரங்களை உள்ளடக்கிய பெரும் குலப்பிரிவுக்கும், கோத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒரு வகைப்பாடு. இந்த வகைப்பாடு தான் ஆரிய வைசிய குலத்தில் ஜெனிடிக்ஸ் டிஸ் ஆர்டர் எனப்படும் மரபுவழி நோய்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தவிர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கும் காரணியாக திகழ்ந்தது. இதனை ஜண்ட கோத்திரங்கள் என்பர். இப்போது அந்த ஜண்ட கோத்திர முறையை யாரும் பின்பற்றுவதில்லை, எனவே தான் ஆரிய வைசிய கோத்திர மக்களில் நிறைய உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பிரவரான் என்பது பல கோத்திரங்களை ஒன்றிணைந்த ஒரு வகைப்பாட்டு பிரிவு எனலாம், பிரவரான்களை 8 ரிஷிகள் நிர்ணயிக்கிறார்கள்.

அந்த எட்டு ரிஷிகள்:

  • அகத்தியர்
  • அத்ரி
  • ஆங்கிரஸர்
  • பார்கவ
  • பார்க்கலர்
  • காசியபர்
  • வசிஷ்டர்
  • விஷ்வாமித்ரர்

ஆரிய வைசிய கோத்திர குலகுருக்கள் அனைவரும் இவர்களுடைய வாரிசுகளே. இவர்களை வைத்தே ப்ரவரான்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

முன்னோர்களின் சூட்சுமம்

உதாரணமாக போதாயனச கோத்திரம் தோற்றுவித்த போதாயனசர் பார்க்கவ முனிவரின் வழி வந்தவர், எனவே போதாயனச கோத்திரத்துக்கு பார்க்கவ முனிவர் ப்ரவரான்.

சரி! ஒவ்வொரு கோத்திரத்துக்கும் பிரவரம் எனும் பிரவரான் எப்படி கண்டுபிடிப்பது?. இங்கே தான் நம் முன்னோர்களின் சூட்சுமம் இருக்கிறது.

கோத்திர பிரவரான்களை கோத்திர ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்லோகத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது என்கிறீர்களா? வாருங்கள் முறையை அறிவோம்….

புதனகுல, புத்திகுல, புதகுல எனும் ரிஷிகுலங்களை கொண்ட போதாயனச கோத்திரத்தின் ஸ்லோகம் இதோ:

பார்க்கவ போதாய த்வயார் ஷ்யேயே ப்ரவரான் விதா போதாயனச கோத்திரஹ…

மேலே உள்ள ஸ்லோகத்தில் பார்க்கவ எனும் முதல் ரிஷி பெயரே ப்ரவரான்.

மேற்கூறிய போதாயனச கோத்திர ஸ்லோகத்தின் அர்த்தம்
பார்க்கவ முனிவரின் வழிவந்த போதாயனர் கோத்திரத்தின் ப்ரவரான் பார்க்கவர். இவ்வாறு ஒவ்வொரு கோத்திர ஸ்லோகமும் ஆரம்பிக்கும் முதல் முனிவரின் பெயரே அந்த கோத்திரத்தின் ப்ரவரான்.

சரி ப்ரவரானை பற்றி கண்டுவிட்டோம். அதனால் என்ன பயன்? காசியப சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது.

பந்த கோத்திரம்

உதாரணமாக வெண்ணகுல, வினுகுல, என்னகுல ஆகிய பல்வேறு சிறுகுலம் எனும் ரிஷி குலங்களைக் கொண்ட மந்தபாலச கோத்திரமும், போதாயனச கோத்திரமும் முறையே மந்தபாலர், போதாயனசர் எனும் இருவேறு முனிவர்களில் இருந்து தோன்றியிருந்தாலும், இந்த இரு முனிவர்களும் பார்க்கவ முனிவரின் வழித்தோன்றல்கள் எனவே இந்த இரு கோத்திரமும் ஒரே ப்ரவரானை கொண்டுள்ளன. எனவே இந்த இரு கோத்திரங்கள் தங்களுக்குள் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்கிறது சாஸ்திரவிதி. இவை யாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள் உறவு கோத்திரங்கள் அல்லது பந்த கோத்திரங்கள் என்றனர்.

உடனே நம் மனதில் ஒரு கேள்வி எழும், இந்த எட்டு ரிஷிகளும் எங்கிருந்து வந்தார்கள் என்று அவர்கள் பிரம்ம தேவனின் மானஸ புதல்வர்கள் அதாவது பிரஜாபதி என வடமொழியில் அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் உறவுமுறையில் அண்ணன் தம்பி ஆனாலும் உடலளவில் உறவுமுறை கொண்டவர்கள், ஏனெனில் பிரம்ம தேவன் இவர்களை தன் படைப்புத்தொழிலுக்கு உதவும் பொருட்டு தன் மனதில் நினைத்ததனால் உருவானவர்கள். இவர்களுக்குள் உடல் சம்பந்தம் இல்லை. எனவே தான் இவர்களை அடிப்படையாக வைத்து பிரவரான்கள் வகைப்படுத்தப்பட்டன.

எங்கே உங்கள் கோத்திர ஸ்லோகத்தை படிக்க சென்றுவிட்டீர்களா???? 😉

இன்னும் பல தேடல்களுடன், ப்ரவரான்கள் கோத்திர அட்டவணை அடுத்த பதிவில்…

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

2 COMMENTS