ஸ்ரீ வாசவி விஜயம் – ஆர்ய வைஸ்யர்களின் புனித நூல் உருவான வரலாறு

5540

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் பேசும் ஆர்ய வைஸ்யர்கள் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புனித நூலினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் வைஸ்ய பூஷணம் கோவை திரு. P.A. ராஜு ஸ்ரேஷ்டியாரின் எண்ணத்திற்கு இணங்க கோவை கிரந்தி வெங்கடகோபால் செட்டியார், சேலம் M.V. கோபால் செட்டியார், தமிழ் புலமை வாய்ந்த அனத்தூர் K. வெங்கட்ராமன் செட்டியார் ஆகியோர் இணைந்து ஸ்ரீ வாசவி விஜயம் எனும் புனித நூலினை இயற்றினர்.

ஸ்ரீ வாசவி விஜயத்தை இயற்றியவர்கள்

தெலுங்கு மொழியில் உள்ள ஸ்ரீ கன்னிகா புராணம், வைஸ்ய தர்ம பிரகாசிகா, வைஸ்ய தர்ம தீபிகா ஆகிய நூல்களை குறிப்புகளாய் கொண்டு ஸ்ரீ வாசவி விஜயம் இயற்றப்பட்டது. மொத்தம் 500 பக்கங்களை கொண்ட இப்புனித நூல், உடுமலை திரு. T.V. ராதாகிருஷ்ணன் செட்டியாரின் கோபால் பதிப்பகத்தில் அச்சடிக்கப்பட்டு 1943 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பழனி திரு. குருசாமி செட்டியாரின் கைவண்ணத்தில் அட்டை படம்

இந்நூலின் மூலமாக நாம் வைஸ்ய குலத்தின் ஆணிவேர், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் வாழ்கை வரலாறு, வைஸ்ய குலத்தின் உன்னதம், வைஸ்ய கோத்திரங்கள் ஆகியவற்றை அழகிய தமிழில் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வெளியான பின், அனத்தூர் K. வெங்கட்ராமன் செட்டியாரை வைஸ்ய பாரதி, பாலகவி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்றார்.

ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?! அதற்காக செய்யும் முயற்சிகளை பற்றியும் ஸ்ரீ வாசவி விஜயத்தை பற்றியும் பண்ருட்டி சோ. முத்துக்குமார் கூறுவதை கீழேயுள்ள காணொளியில் காணுங்கள்.


VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp