ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்

5115

உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .

சென்னையை சேர்ந்த திருமதி. தீபா ராமகிருஷ்ணன், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களையும் தத்ரூபமான ரங்கோலிகளாக வடிவமைத்துள்ளதை இக்காணொளியில் கண்டு இறையருள் பெறுக.

ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்

Posted by Vysdom on Friday, April 19, 2019

மச்ச அவதாரம்:

சத் யுகத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய மீனின் வடிவத்தில் அவதரித்தார் விஷ்ணு பகவான். ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின் போது, மீனின் அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் படகில் இருந்து மனு மற்றும் பிற உயிர்களையும் காப்பாற்றினார்.

கூர்ம அவதாரம்:

ராட்சச ஆமை வடிவத்தின் மூலமாக தன் இரண்டாம் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். பாற்கடலை கடைவதற்கு மந்திரசாலா மலை கடையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பாற்கடல் மிகவும் ஆழமாக இருந்ததால், மந்திரசாலா மலை கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது ராட்சச ஆமை வடிவத்தை எடுத்த விஷ்ணு பகவான் அந்த மலையை தன் தோல் மீது சுமந்து கொண்டார்.

வராக அவதாரம்:

வராக என்ற வார்த்தைக்கு பன்றி என்ற அர்த்தமாகும். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதிகம்.

நரசிம்ம அவதாரம்:

ஹிரன்யகஷிபு என்ற அரக்கனை கொல்ல விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். ஹிரன்யகஷிபு தன்னை எந்த ஒரு மனிதன் அல்லது விலங்கினாலும், வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், பகலிலும் இரவிலும், பூமியிலும் ஆகாயத்திலும், எந்த ஒரு ஆயுதத்தை கொண்டும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான். அதனால் பாதி மனிதன் பாதி சிங்க உருவத்தை எடுத்த விஷ்ணு பகவான், பொழுது சரியும் நேரம், அந்த அரக்கனின் வீட்டில், அவனை தன் மடியில் போட்டு தன் நகத்தினால் கொன்றார்.

வாமன அவதாரம்:

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு அவரை வதை செய்வது வாமன அவதாரம்.

பரசுராம அவதாரம்:

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, சிவபெருமானை வழிப்பட்ட பரசுராமன், ஒரு கோடாரியை பரிசாக பெற்றார். பிராமணர்களைக் காக்க மறுத்த ஷத்ரிய வம்சத்தை இந்த உலகத்தை விட்டு துடைத்து எடுத்தார்.

ராம அவதாரம்:

அயோத்யாவின் இளவராசான ராமர் அசுர அரசரான ராவணனை அழிக்க எடுத்த அவதாரமே ராம அவதாரம்.

கிருஷ்ணா அவதாரம்:

ட்வபரா யுகத்தின் போது கிருஷ்ணர் வடிவத்தில் தன் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். தீய அரசனான கம்சனை கொல்வதற்காகவே அவர் கிருஷ்ணனாக பிறந்தார்.

பலராம அவதாரம்:

கிருஷ்ணரின் மூத்த சகோதரனான பலராமனே விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரம் என்றும் கூறப்படுகிறது.

கல்கி அவதாரம்:

கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்று நம்பப்படுகிறது.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp