போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரின் 37 வருட பாரம்பரியம்!

2106

போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம், ஊதுபத்தி, வரட்டி, ரொக்கம் வசூலித்தார்கள். இது தவிர போளூர் பஜாரில் திரு.ப.சந்தானகோபால் செட்டியார் அரிசிகடை, திரு.ஈ.ஹோமநாதன் அரிசிகடையில் எண்ணை சட்டிகள் வைக்கப்பட்டு பொது மக்களிடம் எண்ணை சேகரிக்கப்பட்டது.

23-11-2018 வெள்ளிக்கிழமை மாலை 02.30 மணிக்கு சேகரிக்கப்பட்ட எண்ணை சட்டிகள், தூக்குகள் கொப்பரைகளை எடுத்துக் கொண்டு போளூர் சப்தகிரி மலைமேல் தீபம் ஏற்ற மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக போளூர் வாழ் பர்வதராஜ குலத்தவர்களே இந்த எண்ணெச் சட்டிகளை தலையில் சுமந்து செல்கிறார்கள். அதேபோல் இவ்வருடமும் அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.Arjunan தலைமையில் அவர்களுடைய மகன்கள் தீபக் மற்றும் சத்தீஷ் ஆகியோர் எண்ணை சட்டிகளை சுமந்தனர்.

போளூர் பஜாரில் திரு.ஹேமநாதன் செட்டியார் அரிசி கடையிலிருந்து மேளதாளத்துடன் கார்த்திகை தீப ஊர்வலம் சென்றது. ஊர்வலத்திற்கு போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தின் தலைவர் திரு.ஈ.தனபால் செட்டியார் தலைமை ஏற்று நடத்தினார். இந்த திருவிழாவிற்கு முழு வீச்சில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நம்மவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. ஸ்ரீராமுலு செட்டியார் வழி நடத்தினார். சமாஜத்தின் உபதலைவர் திரு.அ.ராமதாஸ் செட்டியார் செயலாளர் த.கோவர்தனன் இணைச்செயலாளர்கள் ந.குப்பு செட்டியார் ஆ.தேவந்திரசெட்டியார் ஓ.துவாரகாசெட்டியார், செயற்குழு உறுப்பினர்கள் ப.சந்தானகோபால் செட்டியார், ஆ.ஜெயசங்கர் செட்டியார்,ஈ.ஹேமநாதன் செட்டியார், அ.சண்முகம்செட்டியார், மஹிளாசபா தலைவி ஓ.மஹேஸ்வரி, ஈ.கனகவல்லி மற்றும்  உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான இளைஞரணியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேளதாளத்துடன் சென்ற ஊர்வலம் வழியில் நமது குல தெய்வம் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஆலயத்தை அடைந்து அங்கு வழிபாடு செய்து, பின்னர் 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மலையை பல தெருக்கள் வழியே சென்றது. வழி நெடுகிலும் அனைத்து தரப்பு மக்களும், எண்ணை, கற்பூரம் ஊதுவத்தி, வரட்டி (எரிப்பதற்கு) அளித்தனர். வழியில் உள்ள கோவில்களுக்கு நாங்கள் சேகரித்த எண்ணெயில் ஒரு பகுதியை அங்கு தீபம் ஏற்ற அளித்தோம். இதுபோல் ஊரிலுள்ள மற்ற கோவில்களுக்கும் எண்ணெய் கொடுத்தோம்.

இறுதியில் மலையடிவாரத்தை அடைந்து அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டு மலைப்படிகட்டுகள் வழியே மலை உச்சியை அடைந்தோம். அங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை சேவித்து விட்டு, கோவில் அருகிலுள்ள பாறையில் எண்ணை கொப்பரை வைத்து சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட்டோம், ஜகத்ஜோதியாக எரிந்த தீப ஒளி சுற்று வட்டாரத்தில் 3 கிலோ மீட்டர் வரை தெரிந்தது.

இத்திருவிழாவை போளூர் வாழ் அனைத்து மக்களும் இணைந்து மதநல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டாக 37 வருடங்களாகச் செய்து வருகிறோம். இதற்கு நமது முன்னோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக ஆர்ய வைஸ்யர்களுக்காக இத்தகவலை பகிர்ந்தமைக்கு ஈ.தனபால் செட்டியார், தலைவர் ஆர்ய வைஸ்ய சமாஜம் போளூர் மற்றும் Vn . திரு. R. கோவர்தனன், Past President, Vasavi Club, போளூர் (V502A)அவர்களுக்கு VYSDOM.in இன் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய , இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp