Tree Man – ஆண்டிபட்டி திரு. கோதண்டராஜா

4033
Vysdom_Aryavysya

அறம் காத்த வீரர்களை களம் காத்த வீரர்களை பற்றி நாம் அனைவரும் பக்கம் பக்கமாக படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்திருப்போம் ஆனால் நிலம் காத்த வீரர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நாம் இருந்த தெருக்களிலே நம்மைச் சுற்றி இருந்த காட்சிகளை நம்மால் நினைவில் கொண்டு வர முடிந்தால் நிச்சயம் இன்றைக்கு காண்கின்ற நம் தெருக்களின் இன்றைய சூழல் உண்மையிலேயே நம் அனைவரின் கண்களிலும் ரத்தக்கண்ணீரையே வரவழைக்கும் ஆனாலும் எல்லோருமே நம்மால் என்ன செய்ய முடியும் இந்த சூழ்நிலைக்கு நானா காரணம் என்ற சுய பச்சாதாபத்தில் அந்த இடங்களை கடந்து சென்று விடுகின்றோம்.

ஆனால் இந்த வறண்ட சூழ்நிலையை கண்டுவிட்டு காணாமல் செல்ல முடியாத இதயங்கள் உண்டு என்பதை நிரூபிக்கின்ற மனிதர்களும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் அந்த மனிதர் ஒரு வைஸ்ய குலத்தவர் என்றால் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சும்மா விட்டுவிடுவாரா இதோ இந்த அதிசய மனிதர் வாழ்வது தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டியில்.

தொழில் | கோதண்டம் இட்லிகடை

நான்கு சகோதரர்களில் ஒருவர் திரு.கோதண்டராஜா அவர்கள், இவரைப் பற்றி நாம் சற்று விரிவாகக் காணலாம். இவர் கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டிபட்டியில் வெகுவேக கட்டிட வளர்ச்சியில் உருமாறி அழிந்த மரங்கள் பற்றின சிந்தனையின்றி கடந்தோடும் நிலையில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துவிட்டு சென்றுகொண்டிருக்க இவர் மட்டும் ஆண்டிப்பட்டி மேல் அக்கறை கொண்டு 1000 மரங்களை நட்டு அதில் ஒன்றுகூட வாடவிடாமல் உரம் வைத்து, டிராக்டரில் வாடகைக்கு தண்ணீர் வாங்கி அவற்றை ஊற்றி தன் சொந்த செலவில் பராமரித்தும் வருகிறார். இன்று, ஆண்டிப்பட்டியில் உழவர்சந்தை, காளியம்மன் கோவில், உரகிடங்கு சாலை என இவர் நட்டு வளர்த்துவரும் மரங்களின் மீது கண்ணிலே படாமல் அருகிப்போன அத்தனை பறவைகளும் கூட்டம் கூட்டமாக ஊரை சுற்றி வலம் வருகின்றன காக்கைகள் புங்கை மரத்தில் கூடுகட்டியுள்ளன.

மரத்தை வாழவைக்கும் திரு. கோதண்டராஜா

இப்படியான சமூக அக்கறை கொண்ட இயற்கையை நேசிக்கின்ற எது நடந்தால் என்ன நான் என்ன செய்யமுடியும் இது என்னுடைய வேலை அல்ல என்று நினைக்காமல் இறைவனின் செல்லப்பிள்ளையாக வாழும் நண்பர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருந்தால் சுற்றுச்சூழல் பல்கிபெருகவே செய்யும்.

ஆனால் இவர்களைப் போன்றவர்களை இந்த உலகம் மற்றும் நாம் பாராட்ட வேண்டும் மதிப்பளிக்க வேண்டும். நாம் அனைவருமே சம்பாதிக்கத்தான் செய்கின்றோம் நம்முடைய பணம் எத்தனையோ வழிகளில் செலவாகின்றது ஆனால் இதுவரை ஒரு மரத்தையாவது நாம் நட்டுவைத்து இருப்போமா அப்படி இருந்தால் நிச்சயம் நம் வாழ்க்கைக்கு பின்னே நமக்கும் ஓர் சுகவாழ்வு பூஞ்சோலையாக அமையும்.

இவரை வாழ்த்தி உற்சாகப் படுத்துவோம்! இவர் நம் ஆர்ய வைஸ்யர் என்பது கூடுதல் தகவல்!

கட்டாயம் இவரை வாழ்த்துங்கள்!

சமுதாய மாற்றங்கள் செய்ய மிகப் பெரிய செல்வந்தராகவோ பெரிய பட்டம் பெரிய பதவி இதல்லாம் தேவையே இல்லை என்பது இறையருளால் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் தான் அதனை உணராமல் நோட்டுக்களின் பின்னாலேயே… செல்கிறோம்…

திரு. கோதண்டராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பகிர 9976155451