ஆர்ய வைசியர் வரலாறு – சமூகப் பிரிவு | பாலா வெங்கட்ராமன்

9937
History of Aryavysya_02

வேத நூல்கள் நமது சமுதாயத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பேசுகின்றன. –

வேதம் ஓதும் பிராமணர்கள்.
நாடு காக்கும் அரசர்கள்.
பண்டங்கள் வழங்கிடும் வணிகர்கள்.
உடல் உழைப்பால் தொண்டு புரியும் தூயவர்கள்.

இப்பிரிவுகள் சமுதாய வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான அறிவியல் அடிப்படையிலான ஈடில்லாத அமைப்பு முறை என்பதை உலக மேதைகள் இன்னும் கண்டுணர்ந்து வியந்து அதனை மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.

சமூகப் பிரிவு - பிராமணர்கள், அரசர்கள், வணிகர்கள், தூயவர்கள்
சமூகப் பிரிவு – பிராமணர்கள், அரசர்கள், வணிகர்கள், தூயவர்கள்

முதல் மூன்று பிரிவினர்களில் வணிகத் தொழில் புரியும் வைசியர்கள் அதிக அளவில் திகழ்ந்து வந்தனர்.

சான்று

இதற்கு சான்றாக புராண நிகழ்வு ஒன்றை பார்ப்போம். படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன் அவையில் பிராமணர், சத்ரியர், வைசியர்கள் குடியிருந்தனர். பிரம்மதேவன் அவர்களைக்கண்டு தத்தம் கோத்தரங்களைப் பற்றித் தெரிவிக்குமாறு ஆணையிட்டார்.

பிராமணர்களின் சங்கத்தை சார்ந்த பிரதிநிதியாகக் துர்வாச முனிவர் எழுந்து கூறினார். பிரம்மதேவனே ! எங்களில் 107 கோத்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சிறப்பாகக் கருதப்படுவது 18 மட்டுமேயாகும். சத்ரியர்கள் சங்கத்தைச் சார்ந்த தனஞ்செயன் என்னும் மன்னன் எழுந்து பகர்ந்தான்.

பகவானே ! எங்களில் 7 கோத்திரங்கள் உள்ளன. அவை ஏழும் சிறப்புடையது.

வைசியர்களின் சங்கத்தைச் சேர்ந்த சமாதி எனும் வைசிய முனிவர் தெரிவித்தார்.

உலகங்களையயல்லாம் படைத்த உத்தமோத்மரே! எங்கள் வைசிய குலத்தில் 714 கோத்திரங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் வாழும் வைஸ்ய குல மக்களை பிரம்மன் அகமகிழ புகழ்ந்தான்.

பிராமணர்களின் கோத்திரங்களை ஆங்கீரச முனிவரும், சத்ரியர்களின் கோத்திரங்களை வசிஷ்ட முனியும் வைசியர்களின் கோத்திரங்களை அபரார்க்க மகாமுனியும் நிச்சயம் செய்து நடைமுறை படுத்தினார்கள்.

இம்மூன்று முனிவர்களும் பிரம்ம தேவனின் மானச புதல்வர்கள். பிரம்மதேவனின் விருப்பப்படி இம் மூவரும் மூன்று வர்ணத்தாருக்கும் ஜாதகம் எழுதி பெயர் சூட்டி கோத்திரங்கள் வகுத்தளித்து வழிகாட்டினார்கள்

வைசியர்கள் பிரம்ம தேவனின் தொடையினின்று உண்டானார்கள் என்று புராண வரலாறும் பண்டைய நூல்களும் சாஸ்திரங்களும் இயம்புகின்றன.

பிரம்ம தேவனின் புகழ்ச்சியினால் மட்டிலா மகிழ்ச்சி கொண்ட வைசியர்களில் பலர் பிராமணர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக்கண்டு எள்ளி நகையாடி பரிகசித்தார்கள்.

சில வைஸ்யர்கள் மட்டும் மமதை கொள்ளாது நிலை தடுமாறாது மற்றார் மனம் புண்படாதவாறு அடக்கமாக இருந்தனர். இகழ்ச்சிக்கு ஆளான பிராமணர்கள் அமைதியாக இருப்பார்களா?

பிராமணர்களின் சாபம் – அடுத்த கட்டுரையில் சந்திப்போம்

ஆர்ய வைஸ்ய வரலாறு – முன்னுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. அனைவருக்கும் வணக்கம்
    ஸ்ரீ கோதாவரி வாசவி வரன் குழு ஒருங்கிணைப்பாளர் மற்ற குழுக்கள் ஸ்ரீ வாசவி வரன்கள், ஸ்ரீ வாசவி வது வரன் , ஸ்ரீ வைஸ்யா வரு, ஸ்ரீ கோதாவரி வாசவி வரன் 2 ஆகிய குழுக்கள் நடத்தி வருகின்றனர்
    இதில் ஸ்ரீ வாசவி வரன்கள் Telegram group குழுவில் மட்டும் 2100 நபர்கள் உள்ளனர் தமிழ் நாடு புதுவையில், ஆந்திர, தெலுங்கானா, கேரளா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்
    இது வரை இந்த அனைத்துகுழுவில் சுமார் 80 க்மேற்பட்ட திருமணம் முடிவுற்றது இந்த சேவைகள் அனைத்தும் பகுதி நேரம் இலவசமாக செய்து வருகின்றேன் நமது சமூகத்தில் உள்ள அனைத்து நபர்கள் எதாவது சேவைகள் செய்ய வேண்டும் எனது விருப்பம்.
    எனது பெயர் ந. ஜெகதீஷ்
    கள்ளக்குறிச்சி
    இந்த சேவை உருவாக்கி உள்ள
    திரு கண்ணன் அண்ணா மற்றும் சத்யா சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்…..