VYSDOM.IN – Editor’s Voice

1998

வைசிய சொந்தங்களுக்கு என் அன்பான  வணக்கங்கள் நாம் எவ்வளவு அழகாக இருந்தாலும் நம் அழகை மேலும் கூடுதலாக அழகாக்கிக் கொள்ள ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் மறக்காமல் எவ்வளவோ முயற்சிகள் செய்து அது சரியாக உள்ளதா நமக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதை பார்க்க நாம் அன்றாட வாழ்வில் தினமும் பழகிவிட்ட நம்மை சரியாக்கி நம் குறைகளை திருத்திக்கொள்ள நம்மை தோற்றத்தில் உயர்த்தி சரியாக காட்டிட உதவுவது கண்ணாடி அதைப்போல நம் வைசிய சமுதாயம் என்பது ஒரு கதம்ப வனம் எண்ணிலடங்கா அழகியல் திறமை கொண்ட மக்களைக் கொண்டது நம் வைசிய குலத்தில் என்ன இல்லை என்று பட்டியலிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் என்ன இருக்கின்றது என்னென்ன இருக்கின்றது எங்கே யாரிடம் இருக்கின்றது என்பது தெரிய வேண்டும் நம் வைசியகுல ஆண்/-பெண்/ மாணவ/ மாணவியரிடம் எல்லாத் திறமைகளும் கொட்டிக் கிடக்கிறது என்பதை இப்போது நம்மால் உணர முடிகிறது, அறியமுடிகின்றது.

இந்த இடத்தில் நாம் சற்று யோசிக்க வேண்டும் இப்போது உள்ளவர்கள் திறமையாளர்கள் அப்படியானால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள்?

இப்படி எல்லாக் காலத்திலும் வைசியர்கள் திறமையானவர்களே! அறிவாற்றல் கொண்டவர்களே!

சரி அவர்கள் எல்லாம் இப்போது எங்கே?

வாழ்வியல் சூழலில் சிக்கி குடும்ப கூண்டுக்குள் அடங்கிவிட்டார்கள் அப்பேர்ப்பட்ட திறமையாளர்களையும் கல்வியாளர்களையும் அறிவுசார் ஆற்றல்பெருந்தகைகளையும் வெளிக்கொண்டுவரவும் நம்மை சரிபார்த்து மேலும் அழகு செய்வது போல் அழகாய் அறிவாய் இருக்கும் நமது சமுதாயத்தை இன்னும் இன்னும் அழகு கூட்டிடவும் அறிவு பகிர்வுகளை செய்திடவும்.

நம் வைசிய பண்பாடு கலாச்சாரம் எப்போதும் போல் மற்றவர்கள் பார்த்து உதாரணமாய் போற்றிடும் வகையில் உள்ளதை இளைய தலைமுறைகளுக்கு சேர்த்திடும் கண்ணாடியாகவே இந்த VYSDOM.IN இணையப் பத்திரிகை துவக்கப்பட்டுள்ளது.

Vysdom_Introduction

இங்கே ஒவ்வொரு வைசியர்களின் எண்ணங்களும் பிரதிபலிக்கப்படும் இங்கே இருப்பது நான்! அல்ல நாம்! எனவே திரு பாரதிராஜா அவர்கள் சொன்னது போல தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்திற்குள் செல்வது போன்ற உணர்வு.

இந்த முயற்சியில் ஒத்த அதிர்வு எண்ணம் கொண்ட கன்னிகாதானம் டாட் காம் திரு. எல் சத்யகுமார், பிரபஞ்சனி தம்பதியரையும் என்னையும் இணைத்துள்ள நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பாதகமலங்களை இறுக பற்றி தொடர்கிறோம்.

உலக ஆரிய வைசியர்களின் இதய பூந்தோட்டத்தின் உள்ளே “நினைத்தபோதெல்லாம் நாங்கள் வருகிறோம் உங்கள் இதயத்திற்கு உள்ளே, நினைத்த போதெல்லாம் நீங்களும் வாருங்கள் VYSDOM.IN உள்ளே”.

14 COMMENTS

    • தங்கள்
      வாழ்த்துக்கள்
      பகிர்வு க்கு நன்றி

  1. Congratulations.
    Fantastic ideas.
    We will join you with our ✋.
    நமது அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருள் பெற வணங்குகிறோம்.
    நன்றி.

  2. Really fantastic work done for our community beyond Ur work schedule. Hats off job done. Thanks a lot on behalf of our community.

  3. வைஷ்யம் வாழ்வாங்கு வாழ்வதை வையகம் உணர…..கண்ணணின் தேர் உலா ஆரம்பமாகிவிட்டது. தேர் வடம் பிடிக்க எங்கள் கரங்கள் இணைவதில் இனிய நன்றி சமர்ப்பணம்.

  4. மிகப் பெரிய முயற்சி..
    மிகப் பெரிய சாதனை.
    எங்களையும் அணில் போல இணைத்துக் கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  5. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  6. Anna i would like to jion in the group,i want to learn my family that meansOur Vysya Family. Thans Anna.

  7. Whole Hearted Welcome of our commuinity Web site.
    With best wishes.
    D. Rajendran and family from Chennai.

Comments are closed.