ஆர்ய வைஸ்யர் வரலாறு – Bala Venkataraman

6658
History of Aryavysyas
History of Aryavysyas

ஆர்ய வைஸ்யர் வரலாறு

திரு.பாலாவெங்கட்ராமன்

ஆரிய வைசியர் வரலாறு இந்த தலைப்பில் கட்டுரை படிக்கும் அனைவருமே கட்டுரையின் வடிவத்தையும் வரிகளையும் பார்த்து திரு பாலா வெங்கட்ராமன் அவர்கள் ஓர் பழுத்த பழமாக இருக்கும் என்று சரியாக யோசித்திருப்போம் உண்மைதான் திரு பாலா வெங்கட்ராமன் பழுத்த பழம் தான் வயதில் அல்ல இறையருள் பெற்றதில்.

சிவ சிவா என்னும் நாமத்தை எல்லோரும் சொல்லுவோம் ஆனால் திரு பாலா வெங்கட்ராமன் அவர்கள் சொல்லும்போது அதைக் கேட்பவர்கள் தன்னாலே கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள் போனில் கேட்டாலும் சரி  அப்பேர்பட்ட அதிர்வு நிலையில் சிவ சிவ என்னும் நாமம் அவர் நாபிக்கமலத்திலிருந்து வெளிவரும்.

ஆச்சரியமாக இருக்கும் அவர் ஒரு மென்பொருள் வல்லுனர் அதாவது சாப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறார்.

திரு.பாலா வெங்கட்ராமன்​

இளைஞர் தற்போது தான் இல்லறம் புகுந்து ஓர் அழகிய பெண் மகவைப் பெற்றெடுத்து இருக்கின்றார் இவரின் புகைப்படத்தை பார்த்த யாரும் ஆரிய வைசியர் வரலாறு இந்த இளைஞரா எழுதுகிறார் என்று வியந்து போவோம் ஆன்ம பலம் மிக்க இவர் நம் வைசிய குலத்தில் உள்ள 108 கோத்திரங்களை பற்றியும் விரிவாக ஒவ்வொன்றாக யாரிடமும் சொல்லாமல் ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு கோத்திரக்காரர்கள் ம் எங்கிருந்து புறப்பட்டு எவ்வாறாக நாம் இடம்பெயர்ந்து இன்று நாம் வாழ்கின்ற ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம் என்ற ஆராய்ச்சியைச் செய்து வருகிறார் அதில் சில பல வெற்றிகளையும் சந்தித்து ஆவணப் படுத்தி வருகிறார் நாம் மறந்துவிட்ட நம்முடைய முன்னோர் வரிசையில் பத்தாவது அய்யா அல்லது தாத்தாவோ எப்பேர்பட்ட நிலை கொண்டவர்கள் என்பதை கூட நிகழ்காலத்தில் உள்ள சில பல காரணிகளைக் கொண்டு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து ஒரு வெற்றி நிலையை எட்டி உள்ளார் இவர் நம் வைசிய குலத்திற்கு கிடைத்திருப்பது சாதாரண நிகழ்வன்று நம் வைசிய குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஏதோ ஓர் ஆக்கப்பூர்வமான பணிக்காகவே படைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் இவரைப் போன்றவர்களை தெரிந்து கொள்ளும்போது நமக்கு மனத்தில் உண்டாவது இயற்கையே.

எனவே நாமும் நம் உள்ளே உள்நோக்கி சிந்தித்து நம்மை எதற்காக இந்த வைசிய குலத்தில் இறைவன் படைக்க வேண்டும் என்று சிந்திப்போம் அதன்படி செயல்படுவோம்! ஜெய் வாசவி.

ஆரிய வைசியர் வரலாறு

முன்னுரை

மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும் வாழ்ந்து பின் இறக்கின்றன. பிறப்பதும் இறப்பதும் என எல்லா உயிர்களும் இந்த வாழ்க்கை சங்கிலியில் வீழ்ந்து அழிகின்றன.

மனிதன் என்ற இனம் மட்டும் தான் இந்த வாழ்க்கைச் சங்கிலியையும் மீறி தான் வாழ்ந்த அடையாளத்தை வரலாறாக அடுத்த தலைமுறைக்கு தந்துவிட்டு செல்கின்றன.

அந்த வரலாற்றை பல இனங்கள் தொலைத்ததால் தான் பல இனங்கள் இன்று அடையாளம் இன்றி திரிகிறது.

மறக்கப்பட்ட ஆரிய வைசியர்களின் வரலாறு குறைந்தது 2400 வருடங்கள் முற்பட்டது. இத்தகைய முற்பட்ட வரலாற்றை கொண்டுள்ள நாம் நம் வரலாற்றை பற்றி அறிவது தலையாய கடமை…

சிறப்பு

வைசியர்களின் சிறப்பை சொல்லால் சொல்லி மாளாது. ஒன்றா இரண்டா.

வேதம் நான்கிலும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே

எனும் சைவ ஆகமத்தின் மெய்பொருளை  கடைபிடித்து அதன் பெருமைகளை உலகிற்கு எடுத்து கூற மட்டுமே அவதரித்தவர்கள் வைசியர்கள்.

பெருமையாக 714 கோத்திரங்களை முதலில் கொண்டு பின் 102 கோத்திரர்களாக திரிபடைந்தவர்கள், ஒவ்வொரு கோத்திரமும் ஒரு வைசிய முனிவரால் உருவாக்கப்பட்டது.

கோத்திரத்துக்கென ஒரு குலகுருவும், கோத்திரத்துக்கென ஒரு கடவுளும் கொண்டவர்கள் வைசியர்கள்.

ஊரூர் தத்தஸ்ய ய வைஸ்யஹ

என வேதங்கள் புகழ்ந்து கூறும் வைசியர்களின் புதைந்து கிடக்கும் நம் வைசிய வரலாற்றை கொண்டு வந்து விண்ணில் ஜொலிக்க செய்வதே நம் வேலை….

இனி ஆரிய வைசியர் வரலாறு ஒவ்வொரு மாதமும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்….

பாலா வெங்கட்ராமன்.

 

3 COMMENTS

  1. I too interested in documenting our community history.. Great job bala sir. I am also software engineer. Please let me know if you need assistance.

  2. ஆர்ய வைஸ்யரின் வரலாற்றை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம். சிறந்த முறையில் எழுதும் பாலவெங்கடராமன் அவர்களின் தொடரை படிக்க காத்திருக்கிறேன்..

    • கண்டிப்பாக அண்ணா. உங்களை போன்ற பெரியவர்கள் துணையும், வாசவி அன்னை போற்றும் சிவத்தின் அருளாலும் இனிதே நிறைவேறும்…. சிவ சிவ.

      – பாலா வெங்கட்ராமன்….

Comments are closed.