ஆர்ய வைஸ்யர் சித்தர் ஆன ஆபூர்வ வரலாறு – சொ முத்துக்குமார்

11280
Aryavysya Sidhar - Research

ஆர்ய வைஸ்யர்கள் பொதுவாகவே ஒன்று வியாபாரிகளாக மாறுவார்கள் அல்லது பணிக்குச் செல்வார்கள் ஆனால் நம் வைசிய குலத்தில் இருந்து வித்தியாசமாக ரிஷியாக மாறிய ஒருவரைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா இதோ நம் வைசிய குல ரிஷியைப் பற்றி பண்ருட்டியில் இருந்து நம் வைசிய குல எழுத்தாளர் திரு சொ முத்துக்குமார் அண்ணா அவர்களின் பதிவு. திரு முத்து குமார் அண்ணா எழுத்தாளர் மட்டுமல்ல பன்முக சிந்தனையாளர் இவர்களின் எழுத்து நடை நம்மையெல்லாம் நாம் கடந்து வந்துவிட்ட நம் இளமைப் பருவம் நோக்கி இழுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது தன்னுடைய வங்கிப் பணிகளுக்கு இடையில் இந்த வைசிய சமுதாயத்திற்காக ஒவ்வொரு கோவிலாக ஒவ்வொரு கல்வெட்டாக தேடித் தேடி அலைந்து தான் வைசிய சமுதாயம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது அதன் நதிமூலம் ரிஷிமூலம் ஆகியவற்றை தேடும் முயற்சியில் தான் கண்டுபிடித்தவற்றை அவ்வப்போது நம் குல மக்கள் தெரிந்து கொள்வதற்காக எழுத்துப் பணியை தன் பாணியில் சிறப்பாக செய்து வரும் திரு முத்துக்குமார் அண்ணாவை நாம் அனைவரும் சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் வைசிய குலப் பெருமை நம் சந்ததிகளிடம் இப்போதே சேரச் செய்யலாம் இதுபோன்ற வித்தியாசமான வைசிய சேவையாளர்களை நமக்கு அளித்த நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மாக்கு அனேக கோடி வந்தனம் ஜெய் வாசவி!

திரு. முத்து குமார்

ஆர்ய வைஸ்யர் சித்தர் ஆன ஆபூர்வ வரலாறு

பூல ஸ்வரூபானந்த ஸ்வாமிகள்

ஆர்ய வைஸ்ய குலத்தைச் சார்ந்த ஒருவர் சுமார் 200 வருடங்களுக்கு முன் சித்தராக மாறி பொதுமக்களுக்கு சேவைகள் செய்து பெரும் புகழ்பெற்று “ஜீவ சமாதிநிலையை” அடைந்தார் என்றும் அவரின் அதிஷ்டானம் இன்றும் வளவனுர் என்கிற ஊரில் மக்களின் வழிபாட்டில் இருக்கிறது என்பதை அறிந்தேன் அவரின் உறவினர்கள் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை அறிந்து வியந்து அதைப்பற்றி அறிய அவ்வூருக்கு விரைந்தேன். வளவனூர் எனும் இந்தச் சிறிய ஊர் விழுப்புரத்திலிருந்து 13 புதுச்சேரி செல்லும் சாலையில் சுமார் கிலோ மீட்டர் தொலைவில் கோலியனுரைத்தாண்டி அமைந்துள்ளது . (வளவனூரிலிருந்து புதுச்சேரி சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

நிறைய பேருந்துகள் விழப்புரத்திலிருந்து வளவனூர் செல்கின்றன. இவ்வூரில் உள்ள சக்கி நிறுத்தத்தில் இறங்கினால் சிறிது தொலைவிலேயே இருக்கிறது ஐயப்பன் கோயில். இக்கோயிலின் முகப்பில்தான் ஸ்வரூபானந்த ஸ்வாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. வைஸ்ய குலத்தில் பிறந்து பொது மக்களுக்குப் பல சேவைகள் செய்து அவர்களின் பிணிகளைப்போக்கி தமிழில் யாப்பிலக்கணத்தில் வல்ல பல மாணவர்களை உருவாக்கி தமிழுக்கும் சேவை செய்திருக்கிறார் என்பதை அறியும் போது நம் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குவது இயல்பு.

Aryavysya sidhar

இவரின் வரலாறு இதோ – சோழ மன்னர்களின் சிறப்பு பெயரான வளவன் எனும் பெயரில் அமைந்துள்ள ஊர் தான் வளவனூர். இவ்வூருக்கு அருகில் அமைந்த சிறு கிராமம் தான் செங்காடு. இச்சிறு கிராமத்தில் பிறந்தவர்தான் “கிருஷ்ணப்ப செட்டியார்” (இவரின் பெற்றோர்களின் பெயரை அறிய முடியவில்லை ). இவர் இளமையில் கல்வியில் நாட்டமில்லாமல் இருந்திருக்கிறார். எனவே இவரின் பெற்றோர்கள் இவரை
கால்நடைகளை மேய்க்கப் பணித்து இருக்கிறார்கள். செங்காட்டு கிராமத்தை ஒட்டி ஒரு காடு அங்கே பம்பை
என்கிற ஒரு சிறு நதி ஒடுகிறது. இவர் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருக்கும் போது அங்கே நான்கு முனிவர்கள் ஒரு பஞ்சமுகலிங்கத்தை உருவாக்கி அதற்கு தினமும் பூஜை செய்து வந்தார்களாம். அவர்களுக்கு தேவையான விறகை கிருஷ்ணப்பசெட்டி காட்டில் இருந்து பொறுக்கி எடுத்து கொடுப்பாராம் அவர்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்தும் வந்தாராம். அது மட்டுமல்லாமல் அவர்கள் சொல்லும் மந்திரத்தை இவரும் தொடர்ந்து சொல்ல முயற்சிப்பாராம். சிறுவன் கிருஷ்ணைப்பாவின் ஆர்வத்தையும் அவரின் உதவும் குணத்தையும் கண்ட முனிவர்கள் மனம் மகிழ்ந்து அவரை மனமாற ஆசிர்வதித்தார்கள் என்றும் அன்றிலிருந்து அவர் மஹா ஞானியாக மாறி மக்களுக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்தார் என்றும் நம்பப்படுகிறது. (படிப்பறிவில்லாத காளிதாசன் காளியின் அருளால் மகாகவி காளிதாசனாக மாறியதுபோல் என்று கூட நாம் கொள்ளலாம். அல்லது கிருஷ்ணப்பரின் கற்றுக்கொள்ளும் திறமையைக் கண்டு தமிழ்மொழியின் இலக்கணங்களை கற்றுத்தந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது) அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள முயற்சித்தபோது சிலர் இவர் முனிவர்களுடன் இமயமலைச் சென்று மூலிகை மற்றும் சித்துக்களை கற்று வந்தார் என்றும் கூறுகிறார்கள். அந்நேரத்தில் மகனை காணவில்லை என்று தவித்த பெற்றோரின் முன் தானே சில மாதாங்களுக்குப் பின் தோன்றினார் என்றும் கூறுறார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனமும் நிறைந்திருக்கும் தன் மகன் திடீரென்று அமைதியாகவும் சதா ஏதாவது சிந்தித்துக்கொண்டிருப்பதையும் இறைவனைப்பற்றி உபதேசம் செய்வதையும் பார்த்த பெற்றோர்கள் தாங்களைவிட்டு மகன் துறவியாகிவிடுவானோ என பயந்து கிருஷ்ணப்பருக்குத் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்திவந்தாலும் கிருஷ்ணப்பர் இறைவனைப்பற்றி உபதேசங்கள் செய்வதையும் தன்னை நாடி வரும் மக்களின் பிணிகளை தன் சித்து வன்மையால் தீர்த்ததையும், தமிழ் இலக்கண வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்தாகவும் மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு நல்வழி காட்டி, மக்கள் மதிக்கும் சித்தராக திகழ்ந்தார் என்கின்றனர் வளவர் மக்கள். காணவரும் பக்தர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டுவந்து காணிக்கையாக கொடுப்பார்களாம். சில சமயம் வீட்டில் சமைக்க ஒன்றுமேயில்லை என்று மனைவி கூறினால் சிரித்துக்கொண்டே இப்பொழுது போய் சமையல் அறையில் பார் என்பாராம் அங்கே அன்றைக்குத் தேவையான காய்கறிகள் அன்றைக்குத்தேவையான அரிசி காணப்படுமாம். இதைக்கண்டு அவரின் மனைவியே வியந்து போவாராம் மற்றும் இவரின் சித்துக்களாலும், உபதேசத்தாலும் பயனடைந்த சாருபானந்த ஸ்வாமிகள், மக்கள் இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்கள் பள்ளிக்கு செல்லாதவர் வேதத்தின் பொருளை உபதேசம் செய்தார் என்றும் தமிழ்பண்டிதராக விளங்கினார் என்றும் யாப்பிலக்கணத்தில் வல்லவர் என்றும் கூறுகிறார்கள். இவர் தன்னுடைய 90வயதில் ஜீவ சமாதி அடைந்தார் என்று சொல்கிறார்கள்.

Aryavysya Sidhar - 02

அண்ணாரின் அதிஷ்டானம் இன்று ஐயப்பன் கோயின் உள்ளே இருக்கிறது. அங்கே மூல சொருபானந்த ஸ்வாமிகளின் மடாலயமும் உள்ளது. இங்கே அனைத்து மக்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.இந்த ஜீவசமாதியை வழிபட்டுவருபவர்களுக்கு மனஅமைதி தர கிடைக்கிறது என்று சொல்கிறார்கள் இந்த மகா புருஷரின் வாரிசுகள் இன்றும் வளவனூரில் அமைந்துள்ள இந்த ஜீவசமாதியை பூழிபட்டுவருகிறார்கள் என்பது கூடுதலான செய்தி. இவரின் வம்சத்தில் வந்த ராஜேஸ்வரி அம்மாள் சிலா தங்கள் முன்தான் இயற்கை ஏய்தினார். இவருக்கு 2 மகன்களும் 2 மகன்களும் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தார் சித்தரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அதாவது ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பூஜையை தாங்களும் பிற வைஸ்யர்களின் உதவியுடனும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் அன்று சுமார் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்கிறார்கள் 400க்கும் சாதாரண ஆடுமேய்க்கும் சிறுவனாகயிருந்து சித்தராக அவர் மாறியதற்கு முக்கிய காரணம் பெரியவர்களின் மதிப்பை பெற்றதே. இதற்குத்தான் நம் முன்னோர்கள் பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்றும் அவர்களை மதிநித்து நடக்க வேண்டும் என்றும் அவர்களை அலட்சியம் செய்யக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். பெரியவர்களின் ஆசியிருந்தால் சாதாரண மனிதனும் சித்தர் ஆகலாம் என்பது கிருஷ்ணப்ப செட்டியாரின் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் பாடமாகும்.

Aryavysya Sidhar - 02

அன்பு வாசகர்களுக்கு ஒரு கூடுதல் செய்தி கர்நாடக இசை மேதை திரு.ராமநாதன் அவர்களும் பிரபல தமிழ்
எழுத்தாளர் கீதா பென்ட் அவர்களும் பிறந்த ஊர் வளவனூர் ஆகும். அக்காலத்தில் நிலக்கடலை இங்கே
மிகஅதிகமாக விளையுமாம். கப்பலில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு விளைச்சல் இருந்தாக இங்கே
கூறுகிறார்கள் . வளவனூாருக்கு வந்து சித்தரின் ஜீவசமாதியை தரிசிக்க வரும் பக்தர்கள் இன்னொரு
மகிழ்ச்சியான செய்தி இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ள சக்திவாய்ந்த பூவரசங்குப்பம் நரசிம்மர்
ஆலயத்தையும், பண்ருட்டி ஆர்ய வைஸ்யர்கள் பண்ருட்டி கும்பகோணம் ரோடில் அமைத்துள்ள தன்வந்தரி
பெருமானையும் அங்கே அமைந்துள்ள முலிகைத் தோட்டத்தையும், கோசாலையையும், இயற்கையான
நவகிரக வழிபாட்டு ஸ்தலத்தையும் கண்டு மகிழலாம். ஒரே கல்லில் முன்று மாங்காய்,
வைஸ்யர்கள் விளையாட்டுத்துறையிலிருந்து,மருத்துவத்துறை , இராணுவம் மற்றும் விண்வெளித்துவை
அனைத்துத்துறைகளிலும் இன்று கொடிக்கட்டி பறக்கும் இவ்வேளையில் ஆன்மீகத்துறையிலும்
விளங்கி உயர்ந்த நிலையில் அடைந்திருப்பதை அறிந்து ஒவ்வாரு வைஸ்யரும் பெருமைகொள்ளலாம்.

25 COMMENTS

  1. This message is a News to all our Arya Vysyas. Many of us are pious people. But Krishnappa Chettiar has already surpassed everyone of us !! Great !!!
    – Gurunarayana Rao
    Advocate, Chennai
    9884933374.

  2. Very good information about Arya Vysya
    Good things can do all
    We participate here after to service all
    Not only money isn’t for Life,
    Peace full results
    Peace of Love all
    Service is satisfaction guaranteed
    Thank you very much sir

  3. அண்ணா வாழ்க வளமுடன் தங்கள் கூறிய நமது வைஸ்ய குலத்தில் இருந்து சித்தராக உருவாகி இருக்ககிறார் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.அந்த சித்தரை வணங்குககிறேன்.தகவலுக்கு நன்றி.

  4. மிக்க மகிழ்ச்சி அண்ணா.
    இதுவரை யாரும் அறியாத தகவல்.
    வைஸ்யர்கள் ஆன்மீகம், மற்றவர்களுக்கு உதவும் குணம், மற்றும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஈடுபட்டு, வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு தாங்கள் கொடுத்துள்ள தகவல்மூலம் தெளிவாகிறது.
    மிக்க நன்றி.
    வைஸ்யர்கள் என்பதில் பெறுமைகொள்வோம்.
    நம் கலாச்சார பண்பாடுகளை பேணிக் காப்போம் என்று அனைவரும் இந்த நல்ல நேரத்தில் உறுதியேற்போம்.
    தங்களின் சேவைக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    🙏🙏🙏

  5. மனமார்ந்த வாழ்த்துகள் 🎊
    முத்துகுமார் அண்ணா
    நல்ல ஆய்வு
    ஒரு முறை சங்ககிரி வாருங்கள் கொங்கண சித்தர் வசித்த இடம் தரிசனம் செய்யுங்கள்